Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்உடல் உஷ்ணத்தை குறைக்கும் வெள்ளரிக்காய் கூட்டு!

உடல் உஷ்ணத்தை குறைக்கும் வெள்ளரிக்காய் கூட்டு!

-

வெள்ளரிக்காய் கூட்டு செய்வது எப்படி?

வெள்ளரிக்காய் கூட்டு செய்ய தேவையான பொருட்கள்:உடல் உஷ்ணத்தை குறைக்கும் வெள்ளரிக்காய் கூட்டு!

வெள்ளரிக்காய் – 1
துவரம் பருப்பு – 50 கிராம்
தேங்காய் துருவல் – அரை கப்
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
பால் – 100 மில்லி
பச்சை மிளகாய் – 4 அல்லது 5
சீரகம் – 1 ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 6
உப்பு- தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
கடுகு – தேவையான அளவு
கறிவேப்பிலை – தேவையான அளவு

செய்முறை:

வெள்ளரிக்காய் கூட்டு செய்ய முதலில் குக்கரில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து துவரம் பருப்பை வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். உடல் உஷ்ணத்தை குறைக்கும் வெள்ளரிக்காய் கூட்டு!

பின்னர் சீரகம், பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், தேங்காய் துருவல், ஆகியவற்றை மிக்ஸி ஜாரில் சேர்த்து பேஸ்ட் போல அரைத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது வெள்ளரிக்காயை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து அதனை பால் சேர்த்து வேக வைத்துக் கொள்ள வேண்டும்.

வெள்ளரிக்காய் வெந்து வந்த பிறகு அதில் வேகவைத்த துவரம் பருப்பு, மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து கிளறி விட வேண்டும்.

இந்த கலவை நன்கு கொதித்து வரும் சமயத்தில் அரைத்து வைத்த தேங்காய் விழுது சேர்க்க வேண்டும்.உடல் உஷ்ணத்தை குறைக்கும் வெள்ளரிக்காய் கூட்டு!

பின்னர் இதனை ஐந்திலிருந்து ஏழு நிமிடங்கள் கொதிக்கவிட்டு அடுப்பை அணைத்து இறக்க வேண்டும்.

அதன் பின்னர் இன்னொரு பாத்திரத்தில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் கடுகு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்து வெள்ளரிக்காய் கூட்டில் சேர்த்து விட வேண்டும்.

இப்போது சுவையான வெள்ளரிக்காய் கூட்டு தயார்.

MUST READ