வெற்றிலை வளர்ப்பு;
வெற்றிலையில் 4 தெய்வங்கள் உறைந்துள்ளன.வெற்றிலையின் காம்பில் மகாலஷ்மியும்,நரம்பில் பிரம்மாவும்,முன் பகுதியில் சிவனும்,பின் பகுதியில் சக்தியும் என நான்கு தெய்வங்களும் இருப்பதாக கூறப்படுகிறது.
வெற்றிலை கொடியில் கணுக்காலில் வேர் விட்டிருக்கும் அதன் சிறு கிளையை ஒடித்து வைத்தாலே,முளைத்துவிடும் . வெற்றிலை நடுவதற்கு இரண்டு முறைகள் கையாளப்படுகின்றன. .அதில் ஒன்று டம்ளரில் நீர் வைத்து அதில் கிளையினை விட்டுவைத்தால் ஒரு வாரத்தில் வேர் விடும், அதனை மண்ணில் நட்டு வளரவைக்கலாம்.இன்னொரு முறை தொட்டியில் மணல்,எரு உரம், போட்ட தொட்டியில் நட்டு வைத்தால் இலைகள் வளர ஆரம்பிக்கும். தினமும் நீர்விட வேண்டிய அவசியம் இல்லை. ஈரப்பதம் இருந்தால் பொதுமானது.
வெற்றிலை கொடி வகையைச் சார்ந்தது,அது படர வழி செய்யவேண்டும்.வீட்டில் வெற்றிலை வளர்த்தால் ,அந்த வீடு செழிப்பாக இருக்கும் என நம்புகின்றனர்.ஆன்மீக சம்பிரதாயங்களில் வெற்றிலையும் ஒன்று.அதுமட்டுமில்லாது ஓர் அற்புதமான மூலிகையும் ஆகும்.
வெற்றிலையின் மருத்துவ குணங்கள்;
வெற்றிலையின் மருத்துவ குணம் அறிந்திருந்ததால் தான் பழங்காலம் முதலே வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு உணவு உபசரிப்புக்கு பிறகு வெற்றிலை பாக்கு கொடுக்கும் பழக்கம் இருந்துவந்தது.பல வீடுகளில் இம்முறையினை இன்றும் பின்பற்றி வருகின்றனர்.
அஜீரணகோளாறுகளை சரிசெய்ய வெற்றிலை போட வேண்டும்.வெற்றிலையில் கார்ப்புத்தன்மை இருப்பதால் ,பல உடல் கோளாறுகளையும் சரிசெய்கிறது.
விஷக்கடிக்கு அடர் வெற்றிலையை மென்று விழுங்கினால் விஷத்தன்மையின் வீரியம் குறையும்.
வெற்றிலையை நீரில் ஊறவைத்து ,அந்நீரைக் குடிப்பதால் மலச்சிக்கலைப் போக்கும்.
இனிப்போடு சேர்த்து பீடாவாக போடுவதால் செரிமானப் பிரச்சனை ஏற்படாது.மேலும் மன உலைச்சலில் இருந்து விடுபடலாம்.
வெற்றிலையோடு ஒரு கல் உப்பு சேர்த்து மென்று முழுங்கினால்,வயிறு உப்சம் சரியாகும்.
வெற்றிலை பாக்கு போடுபவர்களுக்கு பல் உறுதிப்படும்.அதாவது வெற்றிலை,பாக்கு,சுண்ணாம்பு ஆகிய மூன்றையும் சேர்த்து சாப்பிடுவதால் தலை,மூக்கு,வாய் என அனைத்து பகுதிகளுக்கும் நல்ல தீர்வைத்தருகிறது.
வெற்றிலையில் புரோட்டின்,நீர்சத்து,கொழுப்பு,மினரல்,நார்சத்து,கால்சியம், கார்போஹைட்ரேட் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.
எலும்புகளுக்கு தேவையான சுண்ணாம்பு சத்துகளையும் கொண்டுள்ளது வெற்றிலை.
வெற்றிலையில் 84.3 சதவீதம் நீர் சத்தும்,3.1 சதவீதம் புரதச்சத்தும்,0.8 சதவீதம் கொழுப்புச் சத்தும் கொண்டுள்ளது. இதன் கலோரி அளவு 44 சதவீதம் ஆகும்.
ஒரு வெற்றிலையை எடுத்து அதில் நல்லெண்ணெய் தடவி அதை அகல் விளக்கில் காண்பித்து சிறிது சூடானதும் அதை நெஞ்சி சளி உள்ள குழந்தைகளின் நெஞ்சில் வெதுவெதுப்பாக இருக்கும் போது போட்டால் சளி குறையும்.
வறட்டு இருமல் இருப்பவர்கள் வெற்றிலை,மிளகு,சீரகம்,மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைத்த வடிகட்டிய நீரை பருகும் போது இருமல் மற்றும் சளியும் குறைகிறது.
குழந்தைக்கு பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு பால் கட்டிக்கொண்டு வலி ஏற்படும் போதுவெற்றிலையில் எண்ணெய் தடவி வைக்கும் போது வலி குறைகிறது.
வெற்றிலை கொடி வீட்டில் வளர்ப்பதால் அந்த வீட்டில் பண வரவு அதிகமாகவே இருக்கும்.
வெற்றிலையின் மருத்துவ குணங்களை அறிந்து அவற்றைப் பயன்படுத்தி நம்மை பாதுகாத்துக்கொள்வோம்.