பெரும்பாலான பெண்களுக்கு ஹார்மோனல் இம்பேலன்ஸ் பிரச்சனையால் கழுத்துகளில் கருமை ஏற்படுகிறது. தைராய்டு போன்ற பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இந்த மாதிரியான அறிகுறி இருப்பதுண்டு. வெயிலினாலும், நகைகளை அணிவதாலும் கூட இந்த பிரச்சனை ஏற்படுவதுண்டு. தற்போது இதை தடுப்பதற்கான வழிமுறைகளை பார்க்கலாம்.
1. சிறிதளவு ரோஸ் வாட்டர், சிறிதளவு வெங்காயச் சாறு, இரண்டு சொட்டு ஆலிவ் எண்ணெய், சிறிதளவு பயத்த மாவு ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் கலந்து கழுத்தில் கருமை உள்ள இடங்களில் தேய்த்து மசாஜ் செய்து வர வேண்டும். வாரத்திற்கு மூன்று முறை இதனை செய்து வந்தால் கழுத்தின் கருமை நீங்கும்.
2. கோதுமை மாவில் சிறிதளவு வெண்ணையை கலந்து கழுத்தில் தேய்த்து 20 நிமிடங்கள் கழித்து குளிக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் கழுத்தில் உள்ள கருமை படிப்படியாக மறையும்.
3. பீர்க்கங்காய் நார் ஒன்றினை எடுத்துக் கொள்ள வேண்டும். பாசிப்பயிறு மாவு, தேவையான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். பாசிப்பருப்பினை தண்ணீரில் தொட்டு கழுத்தில் தடவி பீர்கங்காய் நாரினால் தேய்த்து குளித்து வர கழுத்தின் கருமை நீங்க பளபளப்பாக இருக்கும்.
4. கோதுமை, பாசிப்பயிறு மாவு, ஓட்ஸ் ஆகியவற்றை சிறிதளவு பாலுடன் சேர்த்து கழுத்தில் தேய்த்து கழுவி வர நல்ல பலன் கிடைக்கும்.
ஒரு தடவை இம்முறைகளை பயன்படுத்தி பார்த்துவிட்டு ஒவ்வாமை எதுவும் ஏற்படவில்லை எனில் தேவைப்படும் சமயங்களில் பயன்படுத்தலாம்.