Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்கிறீங்களா?..... இது உங்களுக்காக!

சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்கிறீங்களா?….. இது உங்களுக்காக!

-

நம்மில் பெரும்பாலானவர்களுக்கு உடல் எடையை குறைப்பது மிகவும் சிரமமான ஒன்றாக இருக்கிறது. சிலர் உடற்பயிற்சி, நடை பயிற்சி மேற்கொண்டு உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார்கள். சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்கிறீங்களா?..... இது உங்களுக்காக!அப்படி இருப்பவர்களுக்கு கூட பல நோய்கள் தாக்குகிறது. எனவே உடற்பயிற்சி, நடை பயிற்சி செய்தால் மட்டுமே போதாது. அதைத்தவிர சில வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். அதில் முக்கியமான ஒன்றுதான் தண்ணீர் குடிப்பது. அதாவது ஒரு மனிதன் நாள் ஒன்றுக்கு மூன்று லிட்டர் வரை தண்ணீர் அருந்த வேண்டும் என்பது கட்டாயம். அதே நேரத்தில் அதிக அளவில் தண்ணீர் குடித்தாலும் அதுவும் ஆபத்தானது. இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் உடல் எடை அதிகரிக்க தண்ணீரும் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்கிறீங்களா?..... இது உங்களுக்காக! எப்படி என்று கேட்கிறீர்களா? அதாவது நாம் எப்போதும் உணவு அருந்திவிட்டு உடனடியாக தண்ணீர் குடிக்கிறோம். ஆனால் அப்படி குடிக்கக்கூடாது. ஏனென்றால், நம் உடலானது உணவை செரிக்க கிட்டத்தட்ட இரண்டு மணி நேரங்கள் எடுத்துக் கொள்கின்றன. அதேசமயம் நாம் சாப்பிட்ட உடனே தண்ணீர் அருந்துவது செரிமான நேரத்தை குறைத்து உணவை ஜீரணமாக்க அதிக நேரம் எடுத்துக் கொள்கிறதாம். இது உடல் பருமன் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக அமைகிறது. அதுமட்டுமில்லாமல் நீரழிவு நோய் ஏற்படுவதற்கும் வழிவகை செய்கிறது.

அதாவது உணவு செரிமானம் அடையும்போது திட, திரவ விகிதம் உண்டாகிறது. அப்படி உருவாகும் போது நாம் திடீரென தண்ணீர் குடிக்கும்போதோ அல்லது சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடித்தாலோ அந்த விகிதத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்கிறீங்களா?..... இது உங்களுக்காக!இதை தவிர நாம் சாப்பிடும் உணவை ஜீரணிக்கும் என்சைம்கள் அதிகப்படியான திரவத்தின் காரணமாக தனது வேலையை சரியாக செய்ய முடிவதில்லை. எனவே செரிமானம் பாதிக்கப்படும்போது ஏற்கனவே செரிமானம் ஆகாத உணவுகள் கொழுப்பாக மாறக்கூடும்.சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்கிறீங்களா?..... இது உங்களுக்காக! இதனால் சர்க்கரை அளவு அதிகரித்து நீரழிவு நோய் மட்டுமல்லாமல், அஜீரணக் கோளாறு, வாயு, வீக்கம் போன்ற பிரச்சினைகள் உண்டாகும். மேலும் இது தொப்பையை அதிகரித்து உடல் எடையை அதிகரிக்க செய்கிறது. ஆதலால் சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடிக்காமல் 15 முதல் 20 நிமிடங்கள் கழித்து தண்ணீர் குடிப்பது நல்லது. இது தொடர்பாக உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வது மிகவும் சிறந்தது.

MUST READ