Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்6 மாத குழந்தைக்கு உணவு கொடுக்குறீங்களா?.... இந்த தவறை மட்டும் செய்யாதீங்க!

6 மாத குழந்தைக்கு உணவு கொடுக்குறீங்களா?…. இந்த தவறை மட்டும் செய்யாதீங்க!

-

ஆறு மாத குழந்தைகளுக்கு என்னென்ன உணவுகள் கொடுக்க வேண்டும்? எப்படி கொடுக்க வேண்டும்? என்பதை பற்றி விரிவாக இங்கு பார்க்கலாம்.6 மாத குழந்தைக்கு உணவு கொடுக்குறீங்களா?.... இந்த தவறை மட்டும் செய்யாதீங்க!

பெரும்பாலான வீடுகளில் ஆறு மாத குழந்தைகளுக்கு முதலில் என்ன உணவு கொடுக்க வேண்டும் என்ற சந்தேகம் இருப்பது வழக்கம். இருப்பினும் குழந்தைகளுக்கு ஆறு மாதம் முடிவடைந்ததும்தான் உணவுகளை கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். ஆறு மாத தொடக்கத்தில் கொடுக்கக் கூடாது என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

அதாவது பெரும்பாலான தாய்மார்கள் முதலில் ஆறு மாத குழந்தைகளுக்கு கேழ்வரகினை அரைத்து அதன் பால் எடுத்து கூல் போல் தயாரித்து கொடுப்பார்கள். ஆனால் அது முற்றிலும் தவறானது. 6 மாத குழந்தைக்கு உணவு கொடுக்குறீங்களா?.... இந்த தவறை மட்டும் செய்யாதீங்க!ஏனென்றால் ராகி பாலில், கிடைக்க வேண்டிய சத்துக்கள் மிகவும் குறைவு. எனவே ராகி மாவினை நன்கு சலித்து அதில் கூழ் செய்து கொடுத்தால் தேவையான சத்துக்கள் கிடைக்கும். இதனை இரண்டு ஸ்பூன் அளவு கொடுத்தாலே குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைத்துவிடும்.
அதேபோல் தான் கோதுமை மாவிலும் கூழ் செய்து கொடுக்க வேண்டும்.

அடுத்ததாக காய்கறிகளை வேகவைத்து வெஜிடபிள் ப்யூரி போல் செய்து குழந்தைகளுக்கு கொடுக்கிறார்கள் சில தாய்மார்கள். இதுவும் தவறானது தான். ஏனென்றால் காய்கறி மற்றும் பல வகைகளில் கலோரிகள் மிகவும் குறைவாக இருக்கின்றன. எனவே இதனை நடு உணவாக கொடுக்கலாமே தவிர மெயின் உணவாக கொடுக்கக்கூடாது.6 மாத குழந்தைக்கு உணவு கொடுக்குறீங்களா?.... இந்த தவறை மட்டும் செய்யாதீங்க!

பின்னர் குழந்தைகளுக்கு உணவூட்டத் தொடங்கியதுமே குழந்தைகள் இவ்வளவு தான் சாப்பிட வேண்டும் என்று முடிவு செய்யக்கூடாது. அவர்கள் அரை இட்லி சாப்பிட்டாலும் அவர்களுக்கு தேவையான சத்துக்கள் அதிலிருந்து கிடைத்துவிடும். எனவே ஒரு இட்லி கொடுத்தால் தான் அவர்களுக்கு வயிறு நிரம்பும் என்ற முடிவுக்கு வர வேண்டாம். கொஞ்சம் கொஞ்சமாக உணவை அதிக படுத்த வேண்டும்.

மேலும் குழந்தைகளுக்கு உளுந்து, அவல் போன்ற சத்து நிறைந்த உணவுகளை அடிக்கடி சாப்பிட கொடுப்பது அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இருப்பினும் இது தொடர்பாக குழந்தை மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வது சிறந்தது.

MUST READ