Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்அடிக்கடி பல் வலி ஏற்படுகிறதா?.... உங்களுக்கான டிப்ஸ் இதோ!

அடிக்கடி பல் வலி ஏற்படுகிறதா?…. உங்களுக்கான டிப்ஸ் இதோ!

-

- Advertisement -

பல் வலிக்கான சில டிப்ஸ்.

பொதுவாகவே நாம் சிறுவயதில் இருந்தே பாடப்புத்தகத்தில் நாளொன்றுக்கு இரண்டு முறையாவது பல் துலக்க வேண்டும் என்பதைப் பற்றி படித்திருப்போம். அடிக்கடி பல் வலி ஏற்படுகிறதா?.... உங்களுக்கான டிப்ஸ் இதோ!அதன்படி காலை எழுந்தவுடன் ஒரு முறையும் இரவு தூங்குவதற்கு முன்பாக ஒரு முறையும் பல் துலக்குவது அவசியம். அப்போதுதான் பற்களில் படிந்திருக்கும் கரைகள் நீங்கி எந்தவித பாக்டீரியாக்களும் பற்களில் தங்காது. இதனைப் பின்பற்றாதவர்களுக்கு பற்சொத்தை உண்டாகும். இதன் காரணமாக அந்தப் பல்லில் குழி விழுந்து பல் வலி ஏற்படக்கூடும். அப்படி பல்வலி ஏற்பட்டால் இரவு தூங்குவதற்கு முன்பாக மஞ்சள் தூளை சொத்தை இருக்கும் துவாரத்தில் வைத்து காலையில் கழுவி வந்தால் வீக்கமும் அதனால் ஏற்படும் வலியும் நீங்கும்.அடிக்கடி பல் வலி ஏற்படுகிறதா?.... உங்களுக்கான டிப்ஸ் இதோ!

அடுத்தது வேப்பமரத்து இலைகளை நன்கு கழுவி நல்ல தண்ணீரில் கொதிக்கவிட்டு வெதுவெதுப்பாக எடுத்து இரவு தினமும் தூங்குவதற்கு முன்பாக வாய் கொப்பளித்து வர பல் வலி ஏற்படாது. பல் சம்பந்தப்பட்ட நோய்களும் விரைவில் குணமாகும்.

குளிர்ச்சியான பொருட்களையோ புளிப்பு, இனிப்பு சுவை பொருட்களையோ சாப்பிடுவதனால் ஏற்படும் பல் வலியை குணப்படுத்த இரவு நேரத்தில் திரிபலா சூரணம் பவுடரைக் கொண்டு பல் தேய்த்து வர நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

இருப்பினும் இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.

MUST READ