Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்உங்களுக்கு தீராத கழுத்து வலியா?.... அப்போ இதை செய்யுங்க!

உங்களுக்கு தீராத கழுத்து வலியா?…. அப்போ இதை செய்யுங்க!

-

- Advertisement -

கழுத்து வலி என்பது பொதுவான பிரச்சனையாகும். இந்த கழுத்து வலியானது மன அழுத்தம், உயர் ரத்த அழுத்தம், உடல் உழைப்பு போன்ற பல காரணங்களால் ஏற்படுகிறது. அதேசமயம் தவறான தோரணையில் தூங்குவது போன்ற காரணங்களாலும் கழுத்து வலி ஏற்படக்கூடும். ஆனால் இந்த கழுத்து வலி பலருக்கு எரிச்சலை தரும். இதனால் கழுத்து வலி கவலைப்படும் ஒரு பிரச்சனையாக மாறிவிடுகிறது.உங்களுக்கு தீராத கழுத்து வலியா?.... அப்போ இதை செய்யுங்க!

தற்போது கழுத்து வலிக்கான சில தீர்வுகளை பார்க்கலாம்.

ஒரு டம்ளர் மாட்டுப்பால் எடுத்து அதனை சூடேற்றி வெதுவெதுப்பாக இருக்கும் சமயத்தில் இரண்டு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து (தேவைப்பட்டால் அதில் தேன் கலந்து கொள்ளலாம்) இரவில் படுக்கும் முன்பாக குடித்து வர கழுத்து வலி குணமடையும்.உங்களுக்கு தீராத கழுத்து வலியா?.... அப்போ இதை செய்யுங்க!

சிறிதளவு தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய்யை ஒரு பாத்திரத்தில் ஊற்றி சூடாக்கி இறக்கி வைக்க வேண்டும். பின்னர் அதில் கற்பூரத்தை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இப்போது அந்த எண்ணையை அப்படியே எடுத்து கழுத்தில் வலியுள்ள பகுதியில் தடவி வட்டமாக மசாஜ் செய்து வர கழுத்து வலிக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்.

இருப்பினும் கழுத்து வலி அதிகமாக இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். ஏனென்றால் கழுத்து வலி என்பது புற்றுநோய், மூளைக்காய்ச்சல் போன்ற நோய்களின் அறிகுறியாக இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

MUST READ