Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்நஞ்சறுப்பான் மூலிகை பற்றி தெரியுமா?

நஞ்சறுப்பான் மூலிகை பற்றி தெரியுமா?

-

- Advertisement -

நஞ்சறுப்பான் மூலிகை பற்றி தெரியுமா?நஞ்சுறுப்பான் மூலிகை நீண்ட சதை நிறைந்த வேர்களுடைய கொடி வகை தாவர வகைகளில் ஒன்று. இவற்றில் பூக்கள் வளரிய மஞ்சள் நிறத்துடன் உட்பக்கம் இளஞ்சவப்பாக சிறிய கொத்துக்கள் காணப்படும். தென்னிந்தியாவில் சமவெளி மழைப்பகுதிகளில் ஆயிரம் மீட்டர் உயரம் வரை பரவி காணப்படும். நஞ்சுறுப்பான் மூலிகையானது விஷ நச்சுக்களை முறிக்கும் தன்மை உடையது. இதன் உலர்ந்த வேர்கள் வயிற்றுப்போக்கை குணப்படுத்த பயன்படுகிறது. மேலும் நஞ்சறுப்பான் வேரின் சாறு ஆஸ்துமாவை குணப்படுத்துகிறது.

நஞ்சறுப்பான் மூலிகையின் இலை வேர் ஆகியவை இயல்பிலேயே கசப்பு தன்மை கொண்டவை ஆகும்.

ஆஸ்துமா நோயை குணப்படுத்த நஞ்சறுப்பான் இலைகளை நிழலில் உலர்த்தி பொடி செய்து அரை கிராம் அளவு தினமும் அரை கிராம் அளவு தினமும் காலை, மதியம், மாலை என மூன்று வேலைகள் தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.நஞ்சறுப்பான் மூலிகை பற்றி தெரியுமா?

நஞ்சுகளை வெளியேற்ற இதன் இலைகளை நன்கு அரைத்து அதனை சிறிதளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.

குழந்தைகளுக்கு ஏற்படும் கக்குவான் இருமல் குணமாக நஞ்சறுப்பான் இலை சூரணத்தை கால் தேக்கரண்டி அளவு தேனில் குழைத்து கொடுத்து வரலாம்.

இருந்த போதிலும் இம்முறைகளை எல்லாம் ஒரு முறை பயன்படுத்தி பார்த்துவிட்டு எந்த வித ஒவ்வாமையும் ஏற்படவில்லை என்றால் தேவைப்படும் சமயங்களில் பயன்படுத்தலாம். இல்லையென்றால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

MUST READ