Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்உடல் முழுவதும் வெள்ளையாக வேண்டுமா..... இதை செய்து பாருங்க!

உடல் முழுவதும் வெள்ளையாக வேண்டுமா….. இதை செய்து பாருங்க!

-

நம்மில் பலருக்கு வெயிலினால் முகம் ஒரு நிறமாகவும் கழுத்து ஒரு நிறமாகவும் உடலின் மற்ற பாகங்கள் ஒரு நிறமாகவும் காணப்படும். இப்போது உடல் முழுவதையும் வெள்ளையாக்க சில டிப்ஸ்களை பின்பற்றுவோம்.உடல் முழுவதும் வெள்ளையாக வேண்டுமா..... இதை செய்து பாருங்க!

முதலில் கேரட் ஒன்றை எடுத்துக் கொள்வோம். கேரட்டில் வைட்டமின் ஏ, கரோட்டின் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இவை சருமத்திற்கும் கூந்தலுக்கும் நல்லது. எனவே தினமும் கேரட்டை ஜூஸ் செய்து குடிப்பதனால் சருமம் பொலிவு பெறும். உடலின் நிறம் மாறும்.

அடுத்ததாக பப்பாளியை எடுத்துக் கொள்ள வேண்டும். பப்பாளியில் வைட்டமின் சி, ஏ ,இ போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. அதுமட்டுமில்லாமல் இவை சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்களாகவும் பயன்படுகிறது. உடல் முழுவதும் வெள்ளையாக வேண்டுமா..... இதை செய்து பாருங்க!எனவே பப்பாளி பழத்தை தோல் உரித்து அதில் உள்ள விதைகளை நீக்கி பப்பாளி பழத்தை மட்டும் மிக்ஸியில் அரைத்து முகத்தில் ஃபேஸ் பேக் அல்லது ஸ்க்ரப் போன்று பயன்படுத்தி வரலாம். இதனால் சருமம் மிருதுவாகவும் பளபளப்பாகவும் தோற்றமளிக்கும்.

இப்போது தக்காளியை எடுத்துக் கொள்ள வேண்டும். நன்கு பழுத்த தக்காளி பழத்தை எடுத்து இரண்டாக நறுக்கி அதில் சிறிதளவு சர்க்கரை தொட்டு, முகத்தில் தேய்த்து வர முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைய தொடங்கும்.உடல் முழுவதும் வெள்ளையாக வேண்டுமா..... இதை செய்து பாருங்க!

கிவி பழத்தில் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளது. கிவி பழத்தை தொடர்ந்து சாப்பிடுவதனால் உடலின் நிறம் மாறும். அது மட்டும் இல்லாமல் கிவி பழத்தை முகத்தில் தேய்த்து மசாஜ் செய்வதனால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், வெடிப்புகள் மறையும்.

இம்முறைகளை எல்லாம் ஒரு முறை பயன்படுத்தி பார்த்துவிட்டு எந்த வித ஒவ்வாமையும் ஏற்படவில்லை என்றால் தேவைப்படும் சமயங்களில் பயன்படுத்தலாம்.

MUST READ