ஆண்கள் மற்றும் பெண்கள் சிலருக்கு நாள் முழுவதும் ஓய்வில்லாமல் வேலை செய்வதால் வேர்வைகள் அதிகம் வடியும். இதனால் அக்குள் போன்ற இடங்களில் துர்நாற்றம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இதனால்தான் தினமும் இரண்டு வேலை குளிக்க வேண்டும் என சொல்கிறார்கள். அப்படி இரண்டு வேலைகள் குளித்தால் சருமத்தில் உள்ள வியர்வை மற்றும் துர்நாற்றங்களை உண்டாக்கும் பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு உடல் துர்நாற்றங்கள் பறந்தோடும்.
மேலும் டைட்டாக இருக்கும் துணிகளை அணிவதை தவிர்த்து விட்டு காற்றோட்டமாக இருக்கும் காட்டன் உடைகளை பயன்படுத்துவது நல்லது.
அடுத்தது வியர்வை எதிர்ப்பு மருந்துகள் போன்றவற்றை பயன்படுத்தலாம்.
குறிப்பாக அதிக அளவிலான நீரை பருக வேண்டும். இதன் மூலம் உடலில் இருக்கும் நச்சுக்கள் வெளியேற்றப்பட்டு உடலில் துர்நாற்றம் ஏற்படுவது தடுக்கப்படும்.
வெங்காயம், பூண்டு போன்ற உணவுப் பொருட்கள் உடல் துர்நாற்றத்தை உண்டாக்கும். எனவே வெளியில் செல்லும் சமயங்களில் இந்த உணவுப் பொருட்களை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
மேலும் உடல் துர்நாற்றம் அதிகம் இருப்பதாக உணர்பவர்கள் வேலை செய்து முடித்த பின் சூடான நீரில் குளிக்கலாம். இதனால் இறந்த செல்கள் வெளியேற்றப்படும். அதைத்தொடர்ந்து டியோடோரண்ட் போன்றவற்றை பயன்படுத்தலாம். அப்படி இல்லை என்றால் சூடான நீரில் காட்டன் துணியை நனைத்து உடல் முழுவதும் தேய்த்து அழுக்குகளை நீக்க வேண்டும். பின்னர் மஞ்சள், பாசிப்பயறு, பால் அல்லது தயிர் ஆகியவற்றை கலந்து தேய்த்து குளித்து வரலாம். இதனால் உடல் முழுதும் பிரஷ்ஷாக இருக்கும்.
இருப்பினும் அதிக அளவு துர்நாற்றம் இருப்பின் மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.