Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்இதனால் உங்களுக்கு அஜீரணமா? .......... சிறந்த தீர்வு இதோ!

இதனால் உங்களுக்கு அஜீரணமா? ………. சிறந்த தீர்வு இதோ!

-

மேல் வயிறு அல்லது வயிற்றில் ஏற்படும் சிறிய தொந்தரவு தான் அஜீரணக் கோளாறு. சரியான நேரத்தில் சாப்பிடாவிட்டாலும் சரியான இடைவெளி விட்டு சாப்பிடாவிட்டாலும் இந்த அஜீரண கோளாறு உண்டாகிறது. அந்த காலத்தில் நம் முன்னோர்கள் இரவு 7 மணிக்கு முன்பாகவே சாப்பிட்டு விடுவார்கள். இதனால் உங்களுக்கு அஜீரணமா? .......... சிறந்த தீர்வு இதோ!அந்த காலத்தில் மொபைல், டிவி எதுவும் இல்லை என்பதால் 8 அல்லது 9 மணிக்கு உறங்கி விடுவார்கள். ஆனால் இன்று டெக்னாலஜி வளர்ந்த காலகட்டத்தில் நாம் சாப்பிடுவதற்கு இரவு 9 மணிக்கு மேல் ஆகிவிடுகிறது. இதன் காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஜீரணக் கோளாறுக்கு ஆளாகிறார்கள்.

எனவே ஜீரணக் கோளாறுகளை சரி செய்ய சில தீர்வுகளை இங்கு பார்க்கலாம்.

பால் சாப்பிட்டு அதனால் அஜீரண கோளாறு ஏற்பட்டால் வாழைப்பழம் சாப்பிட வேண்டும்.இதனால் உங்களுக்கு அஜீரணமா? .......... சிறந்த தீர்வு இதோ!

பருப்பு சாப்பிட்டு அதனால் அஜீரணம் ஏற்பட்டால் சிறிதளவு சர்க்கரை சாப்பிட்டால் உடனே சரியாகும்.

பப்பாளி பழம் சாப்பிட்டு அதனால் அஜீரணம் என்றால் தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும்.

தேங்காய் சாப்பிட்டதனால் அஜீரணம் என்றால் சிறிதளவு அரிசியை மென்று சாப்பிட வேண்டும்.

நெய் சாப்பிட்டு அதனால் அஜீரணம் என்றால் எலுமிச்சை சாறு சாப்பிடலாம்.

மாம்பழத்தினால் அஜீரணம் என்றால் பால் சாப்பிட்டால் நல்ல தீர்வு கிடைக்கும்.இதனால் உங்களுக்கு அஜீரணமா? .......... சிறந்த தீர்வு இதோ!

இருப்பினும் அடிக்கடி அஜீரண கோளாறு ஏற்பட்டால் உடனடியாக உங்கள் மருத்துவரை அணுகி அவர் அவரின் பரிந்துரைப்படி உணவு முறைகளை பின்பற்றுவது நல்லது.

MUST READ