சாப்பிட்ட பின் இந்த தவறை மட்டும் செய்ய கூடாதாம்.
இன்றெல்லாம் பல பேர் டிவி, மொபைல் பார்த்துக்கொண்டே சாப்பிடுவது வழக்கமாகிவிட்டது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இப்படித்தான் செய்கிறார்கள். ஆனால் இது எவ்வளவு பெரிய ஆபத்தை விளைவிக்கும் என்பதை பற்றி அவர்கள் யோசிப்பதே இல்லை. அது போல தான் சாப்பிட்ட பின்னும் செய்யக்கூடாத விஷயங்கள் பல இருக்கிறது.
அதாவது சாப்பிட்ட பின்னர் குளிக்க கூடாது, நடக்கக்கூடாது, , ஓடக்கூடாது, உடற்பயிற்சி செய்யக்கூடாது, எந்தவிதமான வெயிட்டான பொருளையும் தூக்கக்கூடாது. சாப்பிட்ட பின் ஓய்வெடுக்க வேண்டும். அதற்காக சாப்பிட்ட உடன் தூங்கி விடக்கூடாது. அப்படி செய்தால் செரிமான பிரச்சனை, நெஞ்செரிச்சல் போன்றவை உண்டாகும். உடல் பருமன் அதிகமாகுவதற்கும் இது காரணமாக அமையும்.
அடுத்தது சாப்பிட்ட பின்னர் டீ, காபி குடிக்க கூடாது. இதனால் ரத்தசோகை உண்டாகும்.
சாப்பிட்ட பின்னர் பழ வகைகளை சாப்பிடக்கூடாது. பழங்கள் சாப்பிடுவது ஆரோக்கியமானதாக இருந்தாலும் அதை உணவு சாப்பிட்டதும் எடுத்துக் கொள்வது செரிமான பிரச்சனை ஏற்படுத்தும். மேலும் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை அதிகரிக்க செய்து நீரழிவு நோய் ஏற்பட வழிவகுக்கும்.
முக்கியமாக சாப்பிட்டபின் புகை பிடித்தல் கூடாது. அதாவது சாப்பிட்ட பின்னர் ஒரு சிகரெட் பிடிப்பது 10 சிகரெட்டுகளுக்கு சமமாகும். இதனால் விரைவில் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
மேலும் சாப்பிடும் போது சிரிப்பது, பேசுவது அனைத்தையும் தவிர்க்க வேண்டும். அது மட்டும் இல்லாமல் சாப்பிடும் போது குளிர்ந்த நீர் குடிப்பதையும் தவிர்த்தல் நல்லது.
இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.