Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்காலையில் வெறும் வயிற்றில் மறக்காம இதை குடிங்க!

காலையில் வெறும் வயிற்றில் மறக்காம இதை குடிங்க!

-

பொதுவாகவே காலையில் எழுந்ததும் என்ன குடிப்பது என்ற குழப்பம் பலருக்கும் இருந்து வருகிறது. அதேசமயம் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தால் அது உடலுக்கு மிகவும் நல்லது. காலையில் வெறும் வயிற்றில் மறக்காம இதை குடிங்க!நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்க இது உதவுகிறது. அது மட்டும் இல்லாமல் மலச்சிக்கல் பிரச்சனை எதுவும் இருந்தால் அதனை தீர்க்க இந்த வழி பெரிதும் கைகொடுக்கும்.

அதேபோன்று காலையில் வெறும் வயிற்றில் பாகற்காய் ஜூஸ், கேரட் ஜூஸ் போன்றவைகளும் உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும்.காலையில் வெறும் வயிற்றில் மறக்காம இதை குடிங்க!

மேலும் அந்த காலத்தில் முன்னோர்கள் பலர் அருகம்புல் ஜூஸ் குடிக்கும் பழக்கத்தை வழக்கத்தில் வைத்திருந்தார்கள். இது செரிமான பாதையை சீராக்கி குடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்ற உதவும்.

அடுத்ததாக நெய் எடுத்துக் கொள்ளலாம். இது நம் சருமத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.

காலை வெறும் வயிற்றில் இஞ்சி சாறு எடுத்துக் கொள்வதால் செரிமான ஆற்றல் மேம்படுவதோடு மட்டுமல்லாமல் குடலின் ஆரோக்கியமும் மேம்படும். இஞ்சி சாறு என்பது செரிமான மண்டலத்தை வலுவாக்கி மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்யும்.காலையில் வெறும் வயிற்றில் மறக்காம இதை குடிங்க!

அடுத்தது முக்கியமான ஒன்று இளநீர். இளநீரை காலை வெறும் வயிற்றில் அருந்துவதால் பொட்டாசியம், மெக்னீசியம், சோடியம் போன்ற உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைப்பதாக உடல் நல ஆலோசகர்கள் கூறுகிறார்கள்.

இருப்பினும் உங்கள் மருத்துவரை அழுகி காலையில் என்ன குடித்தால் நல்லது என்பதை தெரிந்து கொண்டு அதனையே பின்பற்றுங்கள்.

MUST READ