Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்நன்கு பழுத்த வாழைப்பழங்களை ஒதுக்காதீங்க...... ஒன்று சாப்பிட்டாலே அதிக நன்மைகள்!

நன்கு பழுத்த வாழைப்பழங்களை ஒதுக்காதீங்க…… ஒன்று சாப்பிட்டாலே அதிக நன்மைகள்!

-

பொதுவாகவே வாழைப்பழத்தில் அதிக நன்மைகள் இருக்கிறது. அதாவது செவ்வாழைப்பழமாக இருந்தாலும் சரி நாட்டுப்பழமாக இருந்தாலும் சரி எந்த வாழைப்பழமாக இருந்தாலும் அதில் இருக்கும் நார்ச்சத்துக்கள் மலச்சிக்கலுக்கு தீர்வளிக்கிறது. நன்கு பழுத்த வாழைப்பழங்களை ஒதுக்காதீங்க...... ஒன்று சாப்பிட்டாலே அதிக நன்மைகள்!அதுமட்டுமில்லாமல் பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் சி, வைட்டமின் ஏ போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளன. இந்நிலையில் மிகவும் பழுத்த வாழைப்பழத்திலும் ஏராளமான நன்மைகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. பொதுவாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கருப்பு புள்ளி விழுந்த வாழைப்பழங்களை சாப்பிடாமல் ஒதுக்கி விடுவார்கள். ஆனால் அதிகம் பழுத்த கருப்பு புள்ளி விழுந்த அந்த வாழைப்பழம் ஒன்று மட்டும் சாப்பிட்டாலே உடலுக்கு தேவையான சத்துக்கள் அனைத்தும் கிடைப்பதாக சொல்லப்படுகிறது. இதயத்தில் அடிக்கடி வலி ஏற்பட்டால் பழுத்த வாழைப்பழங்களை அடிக்கடி சாப்பிடுவதால் இதயத்தின் ஆரோக்கியம் மேம்படும். இது கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது. மேலும் தசைவழி பிரச்சனை இருந்தாலும் நன்கு பழுத்த வாழைப்பழத்தை சாப்பிட்டால் நல்ல தீர்வு கிடைக்கும்.நன்கு பழுத்த வாழைப்பழங்களை ஒதுக்காதீங்க...... ஒன்று சாப்பிட்டாலே அதிக நன்மைகள்! குழந்தையின்மை பிரச்சனை உடையவர்கள் தினமும் ஒரு டம்ளர் பாலும் ஒரு பழுத்த வாழைப்பழமும் சாப்பிட அவர்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். அடுத்தது குழந்தைகளுக்கும் பாலும் பழமும் கொடுத்தால் அவர்களின் உடல் எடை அதிகரிக்கும். இவ்வாறு பல நன்மைகளை உடைய நன்கு பழுத்த வாழைப்பழங்களை ஒதுக்காமல் சாப்பிடுங்கள். அதே சமயம் சர்க்கரை நோய் இருப்பவர்கள் மருத்துவரின் பரிந்துரையின்படி வாழைப்பழங்களை சாப்பிடுவது நல்லது.

MUST READ