இந்த உலகத்தில் இருக்கும் பெரும்பாலான மக்கள் டீ, காபி குடிக்கும் பழக்கம் உடையவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அதாவது காலையில் எழுந்தவுடன் டீ, காபி குடித்து தான் தன்னுடைய நாளை தொடங்குகிறார்கள். அதிலும் நாள் ஒன்றுக்கு ஐந்து முதல் ஆறு முறை டீ, காபி குடிக்கும் பழக்கம் உடையவர்களும் இருக்கிறார்கள். ஏனென்றால் இன்றுள்ள அவசர காலகட்டத்தில் ஒரு கப் டீ, காபி குடித்தாலே ஒருவேளை சாப்பாடு சாப்பிட்டது போன்ற உணர்வு அவர்களுக்கு கிடைக்கிறது. இவ்வாறுதான் காபி, டீக்கு பலரும் அடிமையாகி விடுகிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் காலையில் எழுந்தவுடன் சர்க்கரை இல்லாத காபி, டீ குடித்தால் பலவிதமான நன்மைகள் கிடைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காலையில் எழுந்தவுடன் குடிக்கும் டீ, காபியை தினமும் சர்க்கரை இல்லாமல் குடித்து வர புத்துணர்ச்சி கிடைக்கும். மேலும் இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. அது மட்டும் இல்லாமல் நாம் காபியில் சேர்க்கும் சர்க்கரையானது நம் உடலில் தேவையில்லாத கலோரிகளை அதிகரிக்கச் செய்யும். இதனால் உடல் பருமன் உண்டாகக்கூடும். எனவே சர்க்கரை இல்லாத காபி குடிப்பதன் காரணமாக உடல் எடையை கட்டுப்படுத்தலாம்.
மேலும் சர்க்கரை இல்லாமல் காபி குடிப்பதனால் மூளையில் சரோ டோனி மற்றும் டோபமைன் ஆகிய ரசாயனங்கள் சுரக்கப்படுவது ஊக்குவிக்கப்படுகின்றன. அதாவது சர்க்கரை இல்லாமல் காபி மட்டும் குடித்தாலே நம் இதயத்தின் ஆரோக்கியம் மேம்படும், கல்லீரலின் ஆரோக்கியம் மேம்படும், ஆக்சிஜனேற்றம் அதிகரிக்கும், உடலின் ஆற்றல் உற்பத்தி அதிகமாகும், கெட்ட கொழுப்புகள் எரிக்கப்படும். எனவே தினமும் காலையில் சர்க்கரை இல்லாமல் காபி, டீ குடித்து உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள். இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.