பொதுவாக அனைவருமே தினமும் ஏதாவது ஒரு வகை பழங்களை எடுத்துக்கொள்வது நல்லது. ஏனென்றால் ஒவ்வொரு பழங்களிலும் ஒவ்வொரு வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் பழ வகைகளில் நார்சத்துக்களும் ஆக்சிஜனேற்றங்களும் காணப்படுகின்றன. அதே சமயம் பழங்களில் நீர் சத்துக்கள் அதிகமாக உள்ளது. எனவே பழங்களை ஜூஸாக வடிகட்டி குடிக்காமல் அதன் சத்துக்கள் குறையாமல் இருக்க அதனை அப்படியே சாப்பிடுவது நல்லது என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். தற்போது பழங்கள் சாப்பிடுவதால் உடல் எடை குறையுமா? அல்லது அதிகரிக்குமா? என்பதை பற்றி பார்க்கலாம்.
அதாவது பழங்கள் என்பது பொதுவாகவே குறைவான கலோரிகளை கொண்டிருக்கும். மேலும் பலங்களில் இயற்கையாகவே இனிப்பு சுவை இருப்பதால் வளரும் பழங்களை விரும்புவர். ஆனால் அதே சமயம் பழங்களை முக்கிய உணவாக எடுத்துக் கொள்ளாமல் நடு உணவாக எடுத்துக் கொள்வது நல்லது. பழங்களில் கலோரிகள் குறைவாக இருப்பதனால் இவை உடல் எடையை குறைப்பதற்கு உதவி புரியும். எனவே ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்க பழங்கள் சாப்பிடுவது நல்லது. மேலும் சருமத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். அத்துடன் இளமையாக இருப்பதற்கும் தினமும் பழங்களை உண்பது ஆரோக்கியமானது என்று நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். ஆகையால் தினமும் பழங்களை சாப்பிடுங்கள். பழங்களை மட்டுமே சாப்பிடாதீர்கள். ஏனென்றால் நமது உடலுக்கு கலோரிகளும் தேவை.
குறிப்பு:
சர்க்கரை நோய் போன்ற பிரச்சனைகள் உடையவர்கள் எந்தெந்த பழங்களை சாப்பிட வேண்டும் எந்தெந்த பழங்களை தவிர்க்க வேண்டும் என்பதை மருத்துவரிடம் கேட்டு தெரிந்து கொண்டு அதை சாப்பிடுவது நல்லது.