Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்தக்காளி சாப்பிட்டால் கண் பார்வைக்கு நல்லது!

தக்காளி சாப்பிட்டால் கண் பார்வைக்கு நல்லது!

-

தக்காளி சாப்பிட்டால் கண் பார்வைக்கு நல்லது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.தக்காளி சாப்பிட்டால் கண் பார்வைக்கு நல்லது!

தற்போது இருக்கும் அவசர காலகட்டத்தில் உணவு பழக்கவழக்கங்களின் மாறுபாட்டால் பலருக்கும் 35 வயதாகி விட்டாலே உடலில் ஒவ்வொரு பிரச்சனைகளும் ஏற்பட தொடங்கி விடுகின்றன. அதில் ஒன்றுதான் கண்பார்வை குறைபாடு. கிட்டத்தட்ட 35 முதல் 40 வயதுக்குள் பெரும்பாலானவர்களுக்கு கண் பார்வை குறைபாடு ஏற்படுகிறது. அதனை தடுக்க ஒரே ஒரு பொருளை சாப்பிட்டாலே போதும். அந்த பொருள் வேறு எதுவும் இல்லை நமக்கு எளிதில் கிடைக்கும் தக்காளி தான்.

தக்காளியில் வைட்டமின் ஏ அதிகம் காணப்படுகிறது. எனவே தக்காளி சாப்பிடுவதால் கண்ணுக்கு நன்மை கிடைக்கும். குறிப்பாக கண் பார்வை தெளிவாக இருக்க வேண்டும் என்றால் தக்காளியை அதிகம் சாப்பிட வேண்டும். தக்காளியை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வதனால் மாலைக்கண் நோய் ஏற்படுவதை தடுக்கலாம். ஆனால் பெரும்பாலானவர்கள் தக்காளியை சாப்பிடுவதனால் கால் வலி ஏற்படும் என சொல்லி வருகிறார்கள். ஆனால் தக்காளியில் மருத்துவ பயன்கள் இருப்பதை தெரிந்து கொள்ளுங்கள். தக்காளியை சாப்பிடுவதால் கண் பார்வை மட்டுமல்லாமல் பல மிதமான நோய்களும் குணமாகும்.தக்காளி சாப்பிட்டால் கண் பார்வைக்கு நல்லது! தக்காளியை அதிகம் சேர்த்துக் கொள்வதனால் நம் உடலுக்கு வலு கிடைக்கும். எலும்புகள் வலுப்பெறும். மூட்டு வலி, எலும்பு தேய்மானம் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க தக்காளியை தினமும் சாப்பிடுவது நல்லது. மேலும் இது புற்று நோய்க்கு எதிராக போராடும் தன்மை கொண்டது. அடுத்தது முக்கியமாக தக்காளியில் நீர் சத்துக்கள் அதிகமாக இருப்பதால் உடல் எடையை குறைக்கவும் இது பயன்படுகிறது.

MUST READ