வலிப்பு நோய் என்பது மூளையை தாக்கும் ஒரு நோய். அதாவது மூளையில் ஏற்படும் அதீத அழுத்தத்தால் நரம்புகள் வழியாக மின்சாரம் போல் உற்பத்தியாகி உடல் உறுப்புகளுக்கு கடத்தப்படுகிறது. இதனால் உடல் உறுப்புகளின் இயக்கம் மாறுபட்டு கை, கால்கள் உதறத் தொடங்குகின்றன. இதை தான் வலிப்பு நோய் என்பார்கள்.
வலிப்பு நோய் ஏற்பட காரணங்கள்:
பிறவியிலேயே மூளை வளர்ச்சி குறைபாடு, மூலையில் கட்டி, ரத்தக் கசிவு, மூலைக்காய்ச்சல் போன்றவை வலிப்பு நோய் உண்டாவதற்கான முக்கியமான காரணங்களாகும். நீரழிவு நோய், விபத்து போன்ற காரணங்களாலும் வலிப்பு நோய் உண்டாகிறது. அதேசமயம் ஆல்கஹால் போன்ற போதை மருந்துகளாலும் வலிப்பு நோய் ஏற்பட வாய்ப்புள்ளது.
வலிப்பு நோயை தடுக்கும் முறைகள்:
தினமும் 7 லிருந்து 8 மணி நேரம் தூங்க வேண்டியது அவசியம்.
நேரம் தவறாமல் உணவுகளை சாப்பிட வேண்டும்.
அதிகமாக உணர்ச்சிவசப்படக் கூடாது. தொடர்ச்சியாக அதிக நேரம் டிவி பார்ப்பதோ செல் ஃபோன் பார்ப்பதோ பேசுவதோ கூடாது.
புகைப்பிடித்தல், மது அருந்துதல் கூடாது.
வலிப்பு நோயை தடுக்க நல்ல உடற்பயிற்சி தியானம் மற்றும் சிந்தனை அவசியம்.
அதே சமயம் வலிப்பு நோய் உள்ளவர்கள் மருத்துவரின் அறிவுரைப்படி முறையான மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இருப்பினும் வலிப்பு நோய் உண்டாகும் சமயத்தில் அவர்களை சுற்றி நிற்பதை தவிர்த்து விட்டு காற்றின் மூலம் அவர்களுக்கு சுவாசம் கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள். மேலும் அவர்களின் அருகில் உள்ள பொருட்களை ஒதுக்கி வைக்க வேண்டும். 5 நிமிடங்களுக்கு மேல் வலிப்பு நீட்டித்தால் ஆம்புலன்ஸை வரவழைத்து மருத்துவரிடம் அழைத்து செல்வது கட்டாயம். வலிப்பு ஏற்படும் சமயத்தில் இரும்பினை கைகளில் கொடுப்பது தவறான ஒன்று. இது வெறும் மூடநம்பிக்கை தான். இதனால் வலிப்பு நிற்காது. எனவே உடனடியாக மருத்துவரிடம் அழைத்து செல்வது நல்லது.
யாராக இருந்தாலும் எந்த நோயாக இருந்தாலும் நிச்சயம் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ள வேண்டும்.