ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டம் (EPS) என்பது, ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஓய்வுக்குப் பிறகு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கும் சமூகப் பாதுகாப்புத் திட்டம்.பணியாளர்களுக்கு மாதந்தோறும், அவர்களது அடிப்படை சம்பளத்தில் 12% EPF நிதி பிடித்தம் செய்யப்படுகிறது. அதேபோல 12% தொகையை நிறுவனங்களும் தங்கள் பங்களிப்பாக வழங்க வேண்டும். அதில் 8.33% EPS பென்ஷனுக்காகவும், 3.67% EPF-க்கும் பங்கிடப்படும். பணியாளர் 58 வயதில் ஓய்வுபெற்றது முதல், மாதா மாதம் EPS பென்ஷன் கிடைக்கப்பெறும். இத்தொகை தற்போது குறைந்தபட்சம் ரூ.1000 ஆகவுள்ளது.
இதை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இந்நிலையில், மத்திய அரசு, EPS-ன் கீழ் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை உயர்த்துவது குறித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், EPFO-வின் கீழ் உள்ள ஊழியர்களுக்கான சம்பள வரம்பை ரூ.18,000 இலிருந்து ரூ.21,000 ஆக உயர்த்தவும், கட்டாயப் பதிவுக்கான குறைந்தபட்ச ஊழியர்களின் எண்ணிக்கையை 20-இலிருந்து 10 ஆக குறைக்கவும் அரசு பரிசீலித்து வருகிறது. இத்தகைய மாற்றங்கள், EPS பயனாளர்களின் நலனை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.இதை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
இனி வீடு, வாகனக் கடன் இஎம்ஐ குறையும்… ரிசர்வ் வங்கியின் அட்ராசக்கை அறிவிப்பு..!