Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்கண்களில் எரிச்சலா? இதை செய்யுங்கள்!

கண்களில் எரிச்சலா? இதை செய்யுங்கள்!

-

- Advertisement -

வெயில் காலங்களிலும் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்யும் பொழுதும் கண்களில் அடிக்கடி எரிச்சல் உண்டாகும். காற்றில் கலந்துள்ள தூசுகள் கண் விழிகளில் பட்டு பாதிப்பை ஏற்படுத்துவதால் இத்தகைய எரிச்சல் உண்டாகிறது. கண்களில் தூசு விழுந்தால் நாம் உடனடியாக கண்களைக் கசக்கி விடுகிறோம். ஆனால் அப்படி செய்தால் தூசுகள் விழிப் படலத்தை பாதிக்கும் வாய்ப்புகள் உண்டு. எனவே வேறு சில வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் கண்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் எரிச்சலை நீக்க முடியும்.கண்களில் எரிச்சலா? இதை செய்யுங்கள்!
கண்களில் எரிச்சல் ஏற்பட்டால் முதலில் நாம் செய்ய வேண்டியது கண்களை தூய நீரில் கழுவ வேண்டும். மிகவும் எளிமையான முறையாக இது இருக்கும். அதே சமயம் கண்களை கழுவும் முன் நம் கைகளை சுத்தமாக கழுவிக் கொள்வது அவசியம்.

சிறிதளவு பஞ்சை எடுத்து அதனை ரோஸ் வாட்டரில் நனைத்து கண் இமைகளை மூடிக்கொண்டு அதன் மீது வைப்பதன் மூலமும் எரிச்சல் குணமாகும். கண்களில் தோன்றும் புண்களினால் ஏற்படும் எரிச்சலுக்கு இம்முறை மிக உகந்ததாக இருக்கும்.கண்களில் எரிச்சலா? இதை செய்யுங்கள்!

உருளைக்கிழங்கை வட்ட துண்டுகளாக நறுக்கி அதனை கண்களின் மேல் 15 முதல் 20 நிமிடம் வைத்து பின்னர் குளிர்ந்த நீரினால் முகத்தை கழுவ கண் எரிச்சல் குணமாகும்.கண்களில் எரிச்சலா? இதை செய்யுங்கள்!

வெள்ளரிக்காயை வட்ட துண்டுகளாக நறுக்கி கண்களை மூடிக்கொண்டு இமைகளின் மேல் 20 நிமிடங்கள் வைக்க கண்கள் குளிர்ச்சி அடைவதுடன் கண் எரிச்சலும் நீங்கும். மேலும் இது கண்களை சுற்றி ஏற்படும் கருவளையங்கள் மறையவும் உதவும். முகத்திற்கும் கண்களுக்கும் பொலிவையும் வழங்குமாற்றல் வெள்ளரிக்காய்க்கு உண்டு.

MUST READ