Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்கர்ப்பிணி பெண்கள் பின்பற்ற வேண்டிய பிட்னஸ் மற்றும் டயட்!

கர்ப்பிணி பெண்கள் பின்பற்ற வேண்டிய பிட்னஸ் மற்றும் டயட்!

-

பெண்கள் கர்ப்ப காலத்தில் பின்பற்ற வேண்டிய சில வழிமுறைகள்:கர்ப்பிணி பெண்கள் பின்பற்ற வேண்டிய பிட்னஸ் மற்றும் டயட்!

பெண்கள் கர்ப்ப காலத்தில் அதிகமான அளவு தண்ணீர் குடிப்பது நல்லது. நாளொன்றுக்கு குறைந்தபட்சம் எட்டு டம்ளர் அளவிற்கு தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும். அது தண்ணீராக மட்டுமல்லாமல் பாலாகவும், இளநீர், மோர் போன்றவையாகவும் இருக்கலாம். நீர்ச்சத்து உடம்பில் அதிகமாக இருப்பது மலச்சிக்கல், கை, கால் வீக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தவிர்க்கும்.கர்ப்பிணி பெண்கள் பின்பற்ற வேண்டிய பிட்னஸ் மற்றும் டயட்!

மேலும் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் குழந்தையின் வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல் உடல் நலத்திற்காகவும் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். உடலுக்கு தேவையான கார்போஹைட்ரேட், புரதம், வைட்டமின்கள் கனிமங்கள், கொழுப்பு வகைகள் போன்ற அனைத்தும் கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு கிடைக்க வேண்டும். பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், முட்டை, முழு தானியங்கள், பால் சார்ந்த பொருட்கள் ஆகியவற்றை பெண்கள் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும்.

பெண்களுக்கு கர்ப்ப காலம் என்பது சில சுவாரசியமான அனுபவங்களையும் கடினமான அனுபவங்களையும் தரக்கூடியது. அதே சமயம் கர்ப்ப கால பெண்கள் ஒவ்வொரு விஷயத்திற்கு பின்னும் உடல் சார்ந்த நடவடிக்கைகள் எப்படி இருக்கிறது என்பதை கூர்ந்து கவனிப்பது அவசியம். அந்த வகையில் பிட்னஸ் மற்றும் டயட் முறைகளையும் பின்பற்ற வேண்டும்.கர்ப்பிணி பெண்கள் பின்பற்ற வேண்டிய பிட்னஸ் மற்றும் டயட்!

குறிப்பாக மிதமான நடைப்பயிற்சி செய்வது யோகாசனங்கள் செய்வது போன்றவை கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு பல விதமான நன்மைகளை தரும். உடல்நலத்தை சீராக வைத்துக் கொள்வது மட்டுமல்லாமல் மனநிலையையும் சீராக வைத்துக் கொள்ள இது உதவும். எப்போதும் சுறுசுறுப்பாகவும் நிம்மதியான தூக்கத்திற்கும் இந்த உடற்பயிற்சி மற்றும் யோகாசனங்கள் உதவும். இதைத் தொடர்ந்து நீங்கள் பின்பற்றி வந்தால் பிரசவ காலங்களில் இது உங்களுக்கு கை கொடுக்கும். இருப்பினும் அடிக்கடி உங்கள் மருத்துவரை சந்தித்து இது தொடர்பாக ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.

MUST READ