Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்இரவில் நிம்மதியாக தூங்குவதற்கு இந்த வழிகளை பின்பற்றுங்கள்!

இரவில் நிம்மதியாக தூங்குவதற்கு இந்த வழிகளை பின்பற்றுங்கள்!

-

தற்போது டெக்னாலஜி வளர்ந்த காலகட்டத்தில் இன்று அனைவரின் வீடுகளிலும் மொபைல் போன் பயன்படுத்தப்படுகிறது. அதிலும் இரவில் படுக்கைக்கு சென்ற பின்பும் பயன்படுத்தி விட்டு தூங்குபவர்கள் 10இல் ஒன்பது பேர் இருக்கிறார்கள். இது நம் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கிறது என்பதை தெரிந்தும் பயன்படுத்துபவர்கள் பலர்.இரவில் நிம்மதியாக தூங்குவதற்கு இந்த வழிகளை பின்பற்றுங்கள்!

இது ஒரு பக்கம் இருக்க நாம் என்னதான் உணவு பழக்க வழக்கங்களை மாற்றினாலும் சீரான வாழ்க்கை வாழ்ந்தாலும் இரவில் நிம்மதியான தூக்கம் இல்லை என்றால் அது எதுவுமே பலனளிக்காமல் போய்விடும். எனவே இரவில் நிம்மதியான உறக்கத்திற்கு சில எளிய வழிகளை பின்பற்றலாம்.

1. இரவில் தூங்குவதற்கு முன் பசும்பாலை நன்கு காய்ச்சி இதமான சூட்டில் குடித்து விட்டு அதன்பின் தூங்க செல்வது நல்லது.இரவில் நிம்மதியாக தூங்குவதற்கு இந்த வழிகளை பின்பற்றுங்கள்! 2. இரவில் அதிகம் தண்ணீர் குடிப்பதை தவிர்ப்பது மிகவும் சிறந்தது. ஏனென்றால் இரவில் தூங்கிக் கொண்டிருக்கும் சமயத்தில் சிறுநீர் கழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் அப்போது தூக்கம் கலைந்து விடும். அதன்பின் பலருக்கும் தூக்கம் வருவதில்லை என்று சொல்கிறார்கள்.
3. அடுத்ததாக நாம் தூங்கும் அறையானது இருட்டாக இல்லாமல் மிதமான வெளிச்சத்தில் இருந்தால் சிறந்தது.
4. மேலும் இரவில் மாமிசம் சாப்பிட்டு தூங்கும்போது செரிமான கோளாறு ஏற்பட்டு இரவில் தூக்கம் கலையும். எனவே இரவில் விரைவில் செரிமானமாகும் உணவுகளை சாப்பிடுவது நல்லது என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.இரவில் நிம்மதியாக தூங்குவதற்கு இந்த வழிகளை பின்பற்றுங்கள்! 5. அதிகாலையில் 5 முதல் 6 மணிக்குள் எழுந்து சூரிய ஒளியை பார்க்க வேண்டும். இவ்வாறு தினம் தோறும் ஒரே நேரத்தில் எழுந்து இரவில் எப்போது தூக்கம் வருகிறதோ உடனே தூங்கி விடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
6. மொபைல் போன் பயன்படுத்துவதை தவிர்த்து விட்டு பிடித்தமான இசையை கேட்டு தூங்குங்கள்.

இருப்பினும் தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுகிறீர்கள் என்றால் உடனடியாக மருத்துவரை அணுகி அதற்கான தீர்வை காணுங்கள்.

MUST READ