குளிர் காலங்களில் நம் தோல் மிகவும் வறண்டு காணப்படும்.முகம், உதடு, கை, கால்களில் வறட்சி உண்டாகும். இவைகளை தடுக்கும் வழிமுறைகள் பற்றி தற்போது பார்க்கலாம்.
1. குளிப்பதற்கு முன்பு தேங்காய் எண்ணையை தேய்த்து 15 நிமிடங்கள் காய வைத்து அதன் பின் குளித்தால் நல்லது.
2. குளித்த பின்பு ஒரு கிண்ணத்தில் தேங்காய் எண்ணெய் மற்றும் இன்னொரு கிண்ணத்தில் சிறிதளவு தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும். சிறிதளவு தேங்காய் எண்ணெய் மற்றும் சிறிதளவு தண்ணீரையும் தொட்டு நம் முகத்திலிருந்து கை, கால்கள் வரை தேய்க்க வேண்டும். தேங்காய் எண்ணெய் ஒரு நல்ல மாய்ஸ்ரைசராக பயன்படுகிறது. குளித்ததும் ஐந்து நிமிடங்களுக்குள் இதனை செய்ய வேண்டும். அந்த காலத்தில் நம் பாட்டி, தாத்தாமார்கள் இப்படித்தான் சருமத்தில் ஏற்படும் வறட்சியை தடுப்பார்கள்.
3. முக்கியமாக சுடு தண்ணீரில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். வெதுவெதுப்பான நீரை மட்டுமே பயன்படுத்தவும்.
4. சில துளி தேங்காய் எண்ணெய்யை நாம் குளிக்கும் நீரில் சேர்த்துக் கொள்வது நல்லது.
5. வீட்டிலேயே தேங்காய் எண்ணெயில் சோப் தயாரித்து பயன்படுத்தலாம். அவ்வாறு பயன்படுத்தினால் நம் சருமத்திற்கு மாய்சுரைசரின் தேவை இருக்காது.
6. வறண்ட சருமம் உள்ளவராக இருந்தால் வாரம் இரண்டு முறை பால் அல்லது தயிரில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து முகத்தில் தேய்த்து 15 நிமிடங்கள் காய விட்டு கழுவி வந்தால் சருமம் அதிகம் வறண்டு போகாமல் தடுக்கலாம்.