Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்நீங்கள் ஆரோக்கியமாக இருக்க சாப்பிடும் போது இதையும் ஃபாலோ பண்ணுங்க!

நீங்கள் ஆரோக்கியமாக இருக்க சாப்பிடும் போது இதையும் ஃபாலோ பண்ணுங்க!

-

இன்றுள்ள காலகட்டத்தில் உணவு பழக்க வழக்கங்களின் மாறுபாட்டால் இளம் வயதிலேயே பல நோய்கள் ஏற்படுகிறது. ஆனாலும் சிலர் நம் முன்னோர்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கு பின்பற்றிய வழிமுறைகளை பின்பற்றத் தொடங்கி விட்டார்கள். நீங்கள் ஆரோக்கியமாக இருக்க சாப்பிடும் போது இதையும் ஃபாலோ பண்ணுங்க!இருப்பினும் ஒரு சில காரணங்களால் நாம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு இடையூறாக இருக்கிறது. அதில் ஒன்று மென்று சாப்பிடுவது. அதாவது ஆண்களை விட பெண்கள் உணவுகளை அதிகம் என்று சாப்பிடுகிறார்கள் என்று சொல்லப்பட்டாலும் பல பெண்கள் உணவை முழுவதுமாக விழுங்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். இவர்களுடைய இந்த பழக்கம் பிற்காலத்தில் தீங்கினை விளைவிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். ஏனென்றால் இதன் காரணமாக வயிறு அதிகம் செயல்பட வேண்டி உள்ளது. அதாவது நாள் ஒன்றுக்கு ஒரு மனிதன் 10ல் இருந்து 15 முறை தான் உணவுகளை மென்று சாப்பிடுகிறான்.நீங்கள் ஆரோக்கியமாக இருக்க சாப்பிடும் போது இதையும் ஃபாலோ பண்ணுங்க! அதாவது உணவை குறைந்தது 30 முதல் 35 முறையில் மென்று சாப்பிட வேண்டும் என்பதுதான் சரி. அப்படி நன்றாக மென்று சாப்பிடுவதால் பற்கள் வலுப்பெறுவதாகவும் இதனால் மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்ப்பு கிடைப்பதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் பசியின்மை பெருகி வயிற்றில் நோய்கள் ஏற்படாமலும் தடுக்கலாம்.

அதேசமயம் அடிக்கடி சாப்பிடும் பழக்கம் நல்லதல்ல என்றும் கூறுகிறார்கள். அதாவது நன்கு பசித்த பின் தான் உணவை உண்ண வேண்டும் என்று நம் பாட புத்தகங்களிலேயே இருக்கிறது. நாம் சாப்பிடும் உணவு செரிமானமாக குறைந்தது 2 மணி நேரமாவது எடுத்துக் கொள்ளும். நீங்கள் ஆரோக்கியமாக இருக்க சாப்பிடும் போது இதையும் ஃபாலோ பண்ணுங்க!அப்படி அந்த இரண்டு மணி நேரத்திற்குள் மீண்டும் சாப்பிட தொடங்கினால் ஜீரணம் ஆகாத உணவுகள் குப்பை போல் சேர்ந்து பல நோய்கள் உண்டாக வழிவகை செய்கிறது. அதில் வயிறு சம்பந்தமான நோய்களும் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரித்து நீரிழிவு நோயும் உண்டாகும். எனவே நன்கு பசித்த பின்னரே உணவை சாப்பிடுங்கள் அதுவும் நன்கு மென்று சாப்பிடுங்கள். இது தொடர்பாக உங்கள் மருத்துவரிடமும் ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள்.

MUST READ