Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்கர்ப்பிணி பெண்கள் சாப்பிட வேண்டிய (ம) சாப்பிடக்கூடாத உணவு வகைகள்!

கர்ப்பிணி பெண்கள் சாப்பிட வேண்டிய (ம) சாப்பிடக்கூடாத உணவு வகைகள்!

-

கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி, குமட்டல், தலைசுற்றல் போன்ற பிரச்சனை ஏற்படும். இருப்பினும் கீரை, நட்ஸ் வகைகள் என பல ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதை தவிர்த்தல் கூடாது. கர்ப்பிணி பெண்கள் சாப்பிட வேண்டிய (ம) சாப்பிடக்கூடாத உணவு வகைகள்!ஏனென்றால் கர்ப்ப காலத்தில் பெண்கள் சாப்பிடும் உணவு வகைகள் கருவில் வளரும் குழந்தை ஆரோக்கியமாக இருக்க வழிவகை செய்யும். அந்த வகையில் கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலத்தில் மீன்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி மீன்கள் சாப்பிடுவதால் குறை பிரசவம் ஏற்படுவதை தடுக்கலாம். மேலும் மீன் என்பது தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க உதவி செய்யும். அது மட்டும் இல்லாமல் எலும்புகள் பலமடையவும் பிரசவ நேரத்தில் உண்டாகும் வலியை தாங்குவதற்கான சக்தியை கொடுக்கவும் இந்த மீன் வகைகள் பயன்படுகிறது.கர்ப்பிணி பெண்கள் சாப்பிட வேண்டிய (ம) சாப்பிடக்கூடாத உணவு வகைகள்!

அடுத்ததாக பெண்கள் கர்ப்ப காலத்தில் லிச்சி பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டுமாம். ஏனென்றால் இந்த பழமானது வெப்பமும், நீர் சத்தும் நிறைந்த பழம். இது ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரித்து நீரழிவு நோயை உண்டாக்கி விடும். ஏற்கனவே கர்ப்ப காலத்தில் பலருக்கும் நீரழிவு நோய் உண்டாக வாய்ப்பிருக்கிறது. இதன் காரணமாக லிச்சி பழம் சாப்பிடுவதை கர்ப்பிணிப் பெண்கள் தவிர்க்க வேண்டும். மேலும் இதில் இருக்கும் வெப்பத்தன்மையானது தொண்டைப்புண், வாய்ப்புண், மூக்கில் ரத்தம் வடிதல் போன்ற பல பிரச்சனைகளை உண்டாக்கிவிடும். எனவே லிச்சி பழத்தை கர்ப்ப காலத்தில் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.கர்ப்பிணி பெண்கள் சாப்பிட வேண்டிய (ம) சாப்பிடக்கூடாத உணவு வகைகள்!

கர்ப்ப காலத்தில் பெண்கள் உணவில் அதிகமான நார்ச்சத்துக்களை சேர்த்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் நார்ச்சத்து மலச்சிக்கல் உண்டாவதை தடுக்கும். பேரிக்காயில் நார்ச்சத்து மட்டுமல்லாமல் பொட்டாசியம், போலேட் போன்ற ஊட்டச்சத்துக்களும் நிறைந்து காணப்படுகிறது. ஆகையால் பேரிக்காயை கர்ப்பிணி பெண்கள் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

இருப்பினும் மருத்துவரை அடிக்கடி சந்தித்து இது தொடர்பாக ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.

MUST READ