Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்பித்தப்பை கற்களை கரைக்கும் நெருஞ்சில் ...... மருத்துவ பயன்கள் பற்றி அறியலாம்!

பித்தப்பை கற்களை கரைக்கும் நெருஞ்சில் …… மருத்துவ பயன்கள் பற்றி அறியலாம்!

-

நெருஞ்சில் என்பது ஒரு மூலிகை வகையாகும். இது வயல் ஓரங்களில் எளிதாக கிடைக்கும். இந்த மூலிகை சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதாவது இந்த மூலிகை பிறப்புறுப்பு, சிறுநீர் பாதையில் உண்டாகும் பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கிறது.பித்தப்பை கற்களை கரைக்கும் நெருஞ்சில் ...... மருத்துவ பயன்கள் பற்றி அறியலாம்!

இந்த நெருஞ்சில் வகை மூலிகை என்பது யானை நெருஞ்சில், சுவதட்டம், காமரசி, சுதம், திரி கண்டம் என பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. மேலும் இதற்கு யானை வணங்கி என்ற பெயரும் உண்டு. இது விந்தணுக்களை பெருக்கி காமத்தை பெருக்கும் தன்மை உடையதால் இதற்கு காமரசி என்ற பெயரும் வந்தது.

பயன்படுத்தும் முறை:

அரிசியுடன் இந்த நெருஞ்சில் செடியை கலந்து வேகவைத்து அதில் நாட்டு சர்க்கரை சேர்த்து கஞ்சி போல் குடித்து வந்தால் சிறுநீர் பாதையில் உள்ள பிரச்சனை விரைவில் குணமடையும். சிறுநீர் எரிச்சலை குணப்படுத்தவும் இம்முறை பயன்படுகிறது. இந்த நெருஞ்சிலை எடுத்து நன்கு காய வைத்து நான்கு பங்கு தண்ணீர் சேர்த்து அதில் ஒரு பங்கு நெருஞ்சில் பொடியை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் நன்கு வற்றியபின் ஆறவைத்து அந்த பானத்தை குடித்து வர சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்றுகள் குணமாகும்.பித்தப்பை கற்களை கரைக்கும் நெருஞ்சில் ...... மருத்துவ பயன்கள் பற்றி அறியலாம்!

அடுத்ததாக பெண்களுக்கு தீவிரமான வெள்ளைப்படுதல் இருப்பின் இந்த நெருஞ்சில் குடிநீர் மருந்தாக விளங்குகிறது.

இந்த செடியை அரைத்து அதை ஆட்டுப்பாலில் ஊற வைத்து பின் அதனை வடிகட்டி அதில் சுத்தமான தேன் கலந்து குடித்து வர ஆண்மை பெருகுமாம். அதேசமயம் நெருஞ்சில் விதை பொடியையும் வெள்ளரி விதை பொடியையும் பாலில் கலந்து குடித்து வந்தால் விந்தணுக்கள் வீரியமாகுமாம்.பித்தப்பை கற்களை கரைக்கும் நெருஞ்சில் ...... மருத்துவ பயன்கள் பற்றி அறியலாம்! அது மட்டும் இல்லாமல் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன்களை இந்த நெருஞ்சில் செடி அதிகப்படுத்துவதாக தெரியவந்துள்ளது. இதன் காரணமாகவே சித்த மருத்துவ முறைகளில் ஆண்மை பெருக்கி மருந்தாக இந்த நெருஞ்சில் செடி பயன்படுகிறது. இருப்பினும் இந்த நெருஞ்சில் செடியை மருந்தாக பயன்படுத்துவதற்கு முன்பாக உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.

MUST READ