மோட்டிவேஷன் என்பது ஒரு மனிதரை செயல்பட தூண்டும் ஆற்றல் ஆகும். இது ஒருவருக்கு உடனடி உற்சாகத்தையும் அவர் இலக்குகளை அடைய உதவும் சக்தியாகவும் இருக்கிறது.
1. தினமும் முயற்சி செய்யுங்கள்
சிறிய இலக்குகளை அமைத்து அதை அடைவதற்கு தினமும் முயற்சி செய்யுங்கள்.
2. ஒவ்வொரு நாளும் முன்னேறுங்கள்
ஒரே நாளில் பெரிய வெற்றிகளை எதிர்பார்க்காமல் ஒரு சதவீதம் மேம்படும் பழக்கத்தை வளர்த்து ஒவ்வொரு நாளும் முன்னேறுங்கள். சிறிய சிறிய முன்னேற்றங்கள் தான் நீண்ட காலத்தில் பெரிய வெற்றியாக மாறும்.
3. தோல்வியை பழகிக் கொள்ளுங்கள்
தோல்வி என்பது நம் வாழ்க்கைக்கு தேவையான பாடம். தோல்வியை நிறைவாக கருதாமல் ஒரு பயணமாக பாருங்கள். தோல்வியை பழகிக் கொள்ளுங்கள். ஏனெனில் எல்லா வெற்றிக்கும் பின்னணியிலும் நிறைய தோல்விகள் அடங்கி இருக்கும்.
4. நேர்மறையான மனிதர்களை வைத்துக் கொள்ளுங்கள்.
உங்களைச் சுற்றி நேர்மறையான மனிதர்களை வைத்துக் கொள்வதனால் நேர்மறை ஆற்றல் கிடைக்கும். அதேபோல் மனதிற்கு ஊக்கம் தரும் புத்தகங்களை படிக்கவும், புதிதாக யோசிக்கவும் முயற்சி செய்யுங்கள்.
6. செயலில் இறங்குங்கள்
அதிகமாக யோசித்துக் கொண்டே இருக்காமல் செயலில் இறங்குவதுதான் முக்கியம். நாளைக்கு செய்யலாம் என்று நினைக்காமல் இப்போதே செய்து பாருங்கள்.
இது தவிர சவால்களை எதிர்கொள்ள வேண்டும். நேர்மறையான சிந்தனைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடிக்க வேண்டும். தேவையான ஓய்வு எடுக்க வேண்டும். பிடித்த விஷயங்களை செய்ய வேண்டும்.
இவையெல்லாம் வாழ்க்கையில் நீங்கள் முன்னேற உதவியாக இருக்கும்.