Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்இந்த கிறிஸ்துமஸ்க்கு குழந்தைகளுக்கு ஆரோக்கியமான கேக் செஞ்சு கொடுங்க!

இந்த கிறிஸ்துமஸ்க்கு குழந்தைகளுக்கு ஆரோக்கியமான கேக் செஞ்சு கொடுங்க!

-

- Advertisement -

கேக் செய்ய முதலில் ஒரு கப் அளவு ராகி மாவு, ஒரு செவ்வாழைப்பழம், ஒரு முட்டை, கால் கப் காய்ச்சி ஆற வைத்த பால், அரை கப் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், அரை ஸ்பூன் பேக்கிங் சோடா, கால் ஸ்பூன் பேக்கிங் பவுடர், அரை கப் கோகோ பவுடர், ஒரு கப் நாட்டு சக்கரை, 10 முந்திரி, 10 பாதாம், பட்டர் ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.இந்த கிறிஸ்துமஸ்க்கு குழந்தைகளுக்கு ஆரோக்கியமான கேக் செஞ்சு கொடுங்க!

இப்போது ராகி மாவினை நன்கு அலசி எடுத்து அதனை மிக்ஸி ஜாரில் சேர்க்க வேண்டும். அதைத் தொடர்ந்து ஒரு செவ்வாழைப்பழம், ஒரு முட்டை, கோகோ பவுடர், நாட்டு சக்கரை சேர்த்து அரைக்க வேண்டும். மேலும் எடுத்து வைத்திருக்கும் பாலை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து அரைக்க வேண்டும். அத்துடன் எண்ணெய் சேர்த்து அரைக்க வேண்டும். இப்போது இந்த கலவையை வேறொரு பாத்திரத்தில் மாற்றி அதில் பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர் சேர்த்து கலக்க வேண்டும். கலவையானது ஓரளவிற்கு கெட்டியான பதத்தில் இருக்க வேண்டும். இப்போது கேக் செய்யும் தட்டை எடுத்து அதை சுற்றி பட்டர் தடவ வேண்டும். அடுத்தது கெட்டியான கலவையை அதில் ஊற்ற வேண்டும். அதன் மேல் முந்திரி, பாதாமை பொடிப்பொடியாக அலங்கரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அதே சமயம் அடுப்பில் இட்லி பாத்திரத்தை வைத்து அதில் ஒரு கப் அளவு உப்பினை கொட்டி 15 நிமிடங்கள் ப்ரீ ஹீட் செய்ய வேண்டும். இதைத்தொடர்ந்து சிறிய கிண்ணம் ஒன்றை உப்பின் மேல் வைத்து மாவு ஊற்றி வைத்திருக்கும் பாத்திரத்தை அதன் மேல் வைக்க வேண்டும். அப்படியே இட்லி பாத்திரத்தை மூடி 20 முதல் 25 நிமிடங்கள் குறைந்த தீயில் வேக வைக்க வேண்டும். 25 நிமிடங்கள் கழித்து ஒரு ஸ்பூன் எடுத்து கேக்கின் நடுவில் குத்தி பார்த்து கேக் வெந்திருக்கிறதா என சரி பார்த்துக் கொள்ள வேண்டும்.இந்த கிறிஸ்துமஸ்க்கு குழந்தைகளுக்கு ஆரோக்கியமான கேக் செஞ்சு கொடுங்க! அதன் பிறகு பத்து நிமிடங்கள் கழித்து வேறொரு தட்டிற்கு கேக்கை மாற்றி கட் செய்து பரிமாற வேண்டும். இப்போது ஆரோக்கியமான ராகி கேக் தயார். இதனை கோதுமை மாவு, ரவை, சத்துமாவு ஆகியவைகளை சேர்த்தும் செய்யலாம்.

குறிப்பு: (முட்டை பிடிக்காதவர்கள் அதற்கு பதிலாக தயிர் சேர்த்துக் கொள்ளலாம்)

MUST READ