தேங்காய் சாதம்
தேங்காய் சாதம் செய்ய தேவையான பொருட்கள்:
தேங்காய் – ஒரு கப்
வெங்காயம் – 2 (பெரியது)
பூண்டு – 10 முதல் 15
காய்ந்த மிளகாய் – 3 முதல் 4 (காரத்திற்கு ஏற்ப)
கடலைப்பருப்பு – ஒரு ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – ஒரு ஸ்பூன்
வேர்க்கடலை (வறுத்தது) – இரண்டு ஸ்பூன்
கடுகு – அரை ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய் – 4 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
தேங்காய் சாதம் செய்ய முதலில் தேங்காயை துருவி எடுத்துக் கொள்ள வேண்டும். அதேசமயம் வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பூண்டு மற்றும் காய்ந்த மிளகாய் ஆகியவற்ற சேர்த்து சிவக்கும் வரை வதக்க வேண்டும். இப்போது பூண்டு மற்றும் காய்ந்த மிளகாய் ஆகிய இரண்டையும் வறுத்து தனியாக எடுத்து வைக்க வேண்டும். அடுத்ததாக அதை பாத்திரத்தில் துருவி வைத்திருக்கும் தேங்காயையும் சேர்த்து வறுக்க வேண்டும். தேங்காய் நிறம் மாறும் வரை கைவிடாமல் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதைத்தொடர்ந்து வறுத்து வைத்திருக்கும் தேங்காய், பூண்டு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது வேறொரு பாத்திரத்தில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு , கறிவேப்பிலை, வேர்க்கடலை ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் அரைத்து தயார் செய்து வைத்திருக்கும் தேங்காய் துருவலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அதே சமயத்தில் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளற வேண்டும். இப்போது அடுப்பை அணைத்துவிட்டு சூடாக வடித்து வைத்திருக்கும் சாதத்தை அதில் கொட்டி கிளறி விட வேண்டும். இறுதியில் கொத்தமல்லி தழைகளை தூவி அலங்கரித்து பரிமாறலாம்.
அப்பளம், வடகம், வடை போன்றவற்றை இந்த தேங்காய் சாதத்திற்கு சைடிஷாக வைத்து சாப்பிடலாம்.