Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்குளிர் காலத்தில் சாப்பிட வேண்டிய ஆரோக்கியமான உணவுகள்!

குளிர் காலத்தில் சாப்பிட வேண்டிய ஆரோக்கியமான உணவுகள்!

-

குளிர்காலத்தில் சாப்பிட வேண்டிய ஆரோக்கியமான உணவுகள்.

பொதுவாகவே நாம் அனைவரும் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வது நம் உடலுக்கு நல்லது. ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். குளிர் காலத்தில் சாப்பிட வேண்டிய ஆரோக்கியமான உணவுகள்!அதே சமயம் பருவநிலை மாற்றத்திற்கு ஏற்ப நம் உணவு வகைகளை மாற்றிக் கொள்வதும் நல்லது. அதில் குளிர்காலத்தில் மிக கவனமாக சத்தான உணவுகளை தேர்ந்தெடுக்க வேண்டும். ஏனென்றால் குளிர் காலத்தில் சில நோய்கள் ஏற்படக்கூடும். எனவே அவற்றைத் தவிர்க்க ஆரோக்கியமான உணவுகளை உண்பதுதான் ஒரே வழி.

குளிர்காலங்களில் பச்சை காய்கறிகளை எடுத்துக்கொள்ள வேண்டும். பச்சை காய்கறிகளை அழற்சி எதிர்ப்பு பண்புகளும் ஆன்ட்டி ஆக்சிடென்டுகளும் அதிகமாக இருக்கும். பாலக்கீரை கட்லட் செய்வது எப்படி?மேலும் இது புற்றுநோயை தடுக்கக்கூடிய சிறந்த உணவு வகைகளில் ஒன்றாக சொல்லப்படுகிறது. குறிப்பாக பாலக்கீரை, வெந்தயக்கீரை போன்றவைகள் சிறந்தது. அதேபோல் சர்க்கரைவள்ளி கிழங்கு போன்ற வேருள்ள காய்கறிகளையும் சாப்பிடலாம். அடுத்தது ஆப்பிள், கொய்யாப்பழம், சீத்தாப்பழம் போன்ற பழங்களை நன்கு கழுவி சாப்பிடுவதன் மூலம் நம் உடலுக்கு தேவையான ஆரோக்கியம் கிடைக்கும். அடுத்தது வேர்க்கடலை சாப்பிடுவதால் இதயத்திற்கு நல்லது.குளிர் காலத்தில் சாப்பிட வேண்டிய ஆரோக்கியமான உணவுகள்!

மேலும் குளிர்கால சமயங்களில் சூப், சூடான பால், தானிய வகை கஞ்சி ஆகியவைகளை எடுத்துக் கொள்ளலாம். அடுத்தது புரத சத்துக்கள் இருக்கும் முட்டை மீன் ஆகியவற்றையும் எடுத்துக் கொள்ளலாம்.குளிர் காலத்தில் சாப்பிட வேண்டிய ஆரோக்கியமான உணவுகள்!

இருப்பினும் இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.

MUST READ