அனைத்து விதமான ஒவ்வாமை பிரச்சனைகளையும் இந்த ஒரே ஒரு மூலிகை தேநீரினால் சரி செய்யலாம். தற்போது மூலிகை தேநீர் செய்யும் முறைகளை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பால் – 100 மில்லி லிட்டர்
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
தேன் – 1 ஸ்பூன்
லவங்கப்பட்டை – ஒரு சிட்டிகை
மிளகுத்தூள் – ஒரு சிட்டிகை
இஞ்சிச்சாறு – கால் டீஸ்பூன்
செய்முறை:
முதலில் மூலிகை தேநீர் செய்ய மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் அளவுகளை சரியாக எடுத்துக்கொள்ள வேண்டும். பின் 100 மில்லி லிட்டர் பாலை மிதமான தீயில் சூடு படுத்திக் கொள்ள வேண்டும். பின் அதனுடன் மஞ்சள் தூள், தேன், லவங்கப்பட்டை, மிளகுத்தூள் , இஞ்சி சாறு ஆகியவற்றை சேர்த்து பத்து நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
தண்ணீர் நன்கு கொதித்து வந்த பிறகு அதனை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ள வேண்டும்.
இந்த தேநீரை தினமும் தூங்குவதற்கு முன்பு குடித்து வந்தால் அனைத்து வகையான ஒவ்வாமை பிரச்சினைகளும் குணமடையும்.
குறிப்பு:
இந்த மூலிகை தேநீரை செய்யும் போது சரியான அளவுகளில் தயார் செய்ய வேண்டும்.
மேலும் இந்த தேநீரை தயார் செய்து பருகுவதற்கு முன்பாக மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.