நம்மில் பெரும்பாலானவர்களுக்கு வெயிலினால் முகம், கை, கால்கள் போன்றவை கருமை அடைகின்றன. அதிலும் முகம் ஒரு நிறமாகவும் கை ஒரு நிறமாகவும் கால் ஒரு நிறமாகவும் கூட இருக்கும். இது போன்ற பிரச்சனைகளை சரி செய்ய இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்கள்.
முதலில் முழங்கை கருமை நீங்குவதற்கு தேங்காய் எண்ணெயுடன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து அதனை கருமையான இடங்களில் தேய்த்து வர வித்தியாசத்தை நீங்களே காணலாம்.
அடுத்ததாக உருளைக்கிழங்கில் ப்ளீச்சிங் பண்புகள் அதிகம் இருப்பதால் சருமத்தை மிருதுவாக வைப்பதற்கு கருமைகளை நீக்கவும் உதவியாக இருக்கிறது. எந்தவிதமான கருமையையும் போக்கும் சக்தி உருளைக்கிழங்கில் இருக்கிறது. உருளைக்கிழங்கை சிறு சிறு துண்டுகளாகி அதனை இரு கைகளிலும் கருமையாக இருக்கும் பகுதிகளில் தேய்த்து 10இல் இருந்து 15 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். அதன்பின் அதனை குளிர்ந்த நீரில் கழுவி வர நல்ல பலன் கிடைக்கும். இதனை தினமும் செய்து வந்தால் கூடுதல் சிறப்பு.
இரண்டு பப்பாளி காய் துண்டுகளை எடுத்து அதன் உட்பகுதியால் கருமையாக இருக்கும் கைகளில் 15 நிமிடங்கள் வரை மசாஜ் செய்ய வேண்டும். அதன் பின் வெதுவெதுப்பான நீரில் நனைத்த துணியால் கைகளை துடைத்து எடுக்க வேண்டும். இப்படி இரண்டு நாட்களுக்கு ஒரு முறை செய்து வந்தால் கைகளில் உள்ள கருமை மறையும்.
சிறிதளவு காய்ச்சாத பாலை எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை காட்டனில் தொட்டு கைகளில் தடவி 10-15 நிமிடங்கள் காய வைக்க வேண்டும். அதன்பின் குளிர்ந்த நீரில் கழுவி வர வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் கைகளில் உள்ள கருமை குறைய தொடங்கும்.
இம்முறைகளை எல்லாம் ஒருமுறை பயன்படுத்தி பார்த்துவிட்டு எந்தவித ஒவ்வாமையும் ஏற்படவில்லை என்றால் தேவைப்படும் சமயங்களில் பயன்படுத்தலாம்.