இன்றைய காலத்தில் உணவு பழக்க வழக்கங்களின் மாற்றத்தால் பெரும்பாலான நோய்கள் இளம் வயதினரை தாக்குகின்றன. அந்த வகையில் கல்லீரல் சம்பந்தமான நோய்களும் உண்டாகிறது. தற்போது கல்லீரல் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு சில வீட்டு வைத்தியங்கள் பற்றி பார்க்கலாம்.
துளசி இலை, வேப்பிலை, கரிசாலை இலை, கீழாநெல்லி இலை ஆகியவைகளை வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டு வர கல்லீரல் நோய் குணமடையும்.
கல்லீரல் கெட்டுப் போனவர்கள் கரிசலாங்கண்ணி கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.
தினமும் கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால் கல்லீரல் பலமடையும்.
கரிசலாங்கண்ணி மற்றும் கீழாநெல்லி ஆகியவற்றை சேர்த்து 45 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர கல்லீரலில் ஏற்படும் வலி குணமாகும்.
வேப்பம் பூவை ஊறவைத்து, அதனை அரைத்து வடிகட்டி சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.
மருதம்பட்டை, கரிசலாங்கண்ணி ஆகியவற்றை காய வைத்து பொடியாக்கி ஒரு கிராம் அளவு தேனில் கலந்து சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குணமடையும்.
சித்திர மூல வேர்ப்பட்டை பொடியை வாழைப்பழத்துடன் சேர்த்து சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.
சீந்தில் கொடியை சாப்பிட்டு வந்தாலும் கல்லீரல் பலம் பெறும்.
நொச்சி இலையின் சாறு எடுத்து அதனை பசுங்கோமியத்துடன் சேர்த்து பருகிவர கல்லீரல் வீக்கம் குறைவது மட்டுமல்லாமல் மண்ணீரல், நுரையீரல் வீக்கமும் குறையும்.
இருப்பினும் இம்முறைகளை எல்லாம் ஒருமுறை பயன்படுத்தி பார்த்துவிட்டு எந்தவித ஒவ்வாமையும் ஏற்படவில்லை என்றால் தேவைப்படும் சமயங்களில் பயன்படுத்தலாம். இல்லை என்றால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.