Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்வாய் புண் ஆற.... தீர்வு இதோ!

வாய் புண் ஆற…. தீர்வு இதோ!

-

- Advertisement -

பெரும்பாலானவர்களுக்கு வெயில் காலங்களில் அதிக சூட்டின் காரணமாக வாயிலுள் புண்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதுமட்டுமில்லாமல் மருந்து, மாத்திரைகள் சாப்பிடுபவர்களுக்கும் சில மருந்துகள் அலர்ஜியை ஏற்படுத்துவதாலும் புண்கள் ஏற்படுகின்றன. இப்போது வாய் புண்களை சரி செய்ய சில டிப்ஸ்களை பார்க்கலாம்.வாய் புண் ஆற.... தீர்வு இதோ!

சிறிதளவு வெந்தயத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து அதன் நீரை வெதுவெதுப்பாக இருக்கும் போது வாயில் ஊற்றி கொப்பளித்து வரவேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று வேலைகள் செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.

வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு உப்பு சேர்த்து வாயை கொப்பளித்து வர வாய்ப்புண் சரியாவது மட்டுமல்லாமல் வலியும் குறையும். அதேசமயம் வாய் துர்நாற்றமும் குறையும்.

துளசி இலைகளை மென்று சாப்பிட்டு பின்னர் வெதுவெதுப்பான நீரினால் வாயை கொப்பளித்து வர வாய்ப்புண்கள் ஆறும். ஏனெனில் துளசியில் ஆன்டி பாக்டீரியா நிறைந்து காணப்படுகிறது.

கற்றாழை சாறு என்பது வாய்ப்புண்ணை சரி செய்யும் முக்கிய மருந்து. இதன் சாறு எடுத்து வாயில் ஊற்றி சிறிது நேரம் புண்ணில் படும்படி வைத்திருந்து பின்னர் கொப்பளித்து துப்ப வேண்டும். இவ்வாறு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை செய்ய நல்ல தீர்வு கிடைக்கும்.

தேங்காய் எண்ணெய் என்பது எளிதில் கிடைக்கக்கூடிய ஒரு பொருள். இது எந்த ஒரு புண்களுக்கும் உடனடி வலி நிவாரணியாக பயன்படுகிறது. எனவே புண் ஆறும் வரை தேங்காய் எண்ணெயை தடவி வரலாம்.

இருப்பினும் இம்முறையை பின்பற்றுவதற்கு முன்பாக மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது. மேலும் எந்தவித ஒவ்வாமையும் இல்லையென்றால் மட்டுமே இதனை பின்பற்ற வேண்டும்.

MUST READ