நமது ஆசைகளை எல்லாம் தீர்த்து வைக்கும் நண்பன் என நம் பாதங்களை சொல்லலாம். ஏனெனில் நாம் எங்கு செல்ல வேண்டும் என்று நினைக்கின்றோமோ அங்கு நம்மை அழைத்து செல்கிறது. அப்படிப்பட்ட பாதத்தினை நாம் சில சமயங்களில் கண்டுகொள்ளாமல் விட்டு விடுகின்றோம். அதனால் பாதத்தில் கிருமி தொற்று ஏற்படுகிறது. வெடிப்பு ,அரிப்பு போன்ற பிரச்சனை உண்டாகிறது. எனவே பாதத்தில் உள்ள கிருமிகளை அகற்றவும், பாதங்கள் மிருதுவாக இருப்பதற்கு உண்டான வழிமுறைகளை பார்ப்போம்.
1. ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 2 டேபிள் ஸ்பூன் தேன் ஆகிய இரண்டையும் கலந்து கொள்ள வேண்டும். பின் இதனை பாதங்களில் தடவி மசாஜ் செய்து 20 நிமிடங்கள் விட்டு அதனை கழுவி வர பாதங்கள் மிருதுவாகவும் மென்மையாகவும் மாறுவதை காணலாம்.
2. புதினா சாறை எடுத்து கால்களில் தடவி வந்தால் பாதங்களில் உண்டாகும் சொரசொரப்பு நீங்கி மென்மையாக மாறிவிடும்.
3. பாதங்கள் மிருதுவாக இருக்க, பீர்க்கங்காய் நார் கொண்டு தினமும் குளிக்கும்போது பாதத்தில் நன்றாக தேய்த்து குளித்து வந்தால் பாதங்கள் மிருதுவாகிவிடும்.
4. பாதம் மூழ்கும் அளவிற்கு வெதுவெதுப்பான நீரை எடுத்துக்கொண்டு அதனை அகன்ற பாத்திரத்தில் ஊற்றி நம் கால் பாதங்களை அதில் சிறிது நேரம் வைக்க வேண்டும். அப்படி வைக்கும் போது பாதங்களில் இருக்கும் இறந்த செல்கள் வெளியேறும். சூடு குறைந்த பின்பு கால்களை வெளியே எடுத்து பீர்க்கங்காய் நாடினால் தேய்த்து வர பாதங்கள் வெண்மையாகவும், மிருதுவாகவும் மாறும். அதன்பின் கால்களை நன்கு துடைத்துவிட்டு சிறிது தேங்காய் எண்ணெயை பாதங்களில் தடவ வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் வித்தியாசத்தை காணலாம்.
5. கடுகு எண்ணெயை பாதங்களில் தேய்த்து கழுவி வந்தால் பாதங்கள் மென்மையாகும்.
இந்த முறைகளை எல்லாம் பயன்படுத்தி பார்த்துவிட்டு ஒவ்வாமை எதுவும் ஏற்படவில்லை என்றால் இதனை வாரத்துக்கு இரண்டு முறை பயன்படுத்தலாம்.