Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்பலாப்பழ கொட்டையில் ஒளிந்துள்ள நன்மைகள்!

பலாப்பழ கொட்டையில் ஒளிந்துள்ள நன்மைகள்!

-

பலாப்பழ கொட்டையில் மறைந்துள்ள நன்மைகள்:பலாப்பழ கொட்டையில் ஒளிந்துள்ள நன்மைகள்!

பலாப்பழம் என்பது முக்கனிகளில் ஒன்றாகும். பலாப்பழத்தை விரும்பாதவர்கள் எவரும் இலர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பலாப்பழத்தை விரும்பி சாப்பிடுவார்கள். பலாப்பழத்தில் வைட்டமின் ஏ , பொட்டாசியம் வைட்டமின் சி, கால்சியம், இரும்புச்சத்து, துத்தநாகம் போன்றவை நிறைந்துள்ளது. இவ்வாறு பல நன்மைகளைக் கொண்டிருக்கும் பலாப்பழத்தில் மட்டுமல்லாமல் பலாப்பழ கொட்டையிலும் பல நன்மைகள் அடங்கி இருக்கிறது என்பது எத்தனை பேருக்கு தெரியும்.பலாப்பழ கொட்டையில் ஒளிந்துள்ள நன்மைகள்!

பலாப்பழக் கொட்டையை வைத்து முகத்தில் உள்ள சுருக்கங்களை நீக்கலாம். அதாவது ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு பால் எடுத்துக் கொள்ள வேண்டும். தேசமயம் தோல் நீக்கிய பலாப்பழக் கொட்டையை பாலில் ஊற வைக்க வேண்டும். இப்போது பாலில் ஊறிய பலாப்பழ கொட்டையை மிக்ஸி ஜாரில் சேர்த்து அடித்துக் கொள்ள வேண்டும். சிறிதளவு தேன் சேர்த்து வேஸ்ட் போல அடித்துக் கொள்ள வேண்டும். இந்த பேஸ்டை முகத்தை நன்கு கழுவிய பின்னர் முகத்தில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். வாரத்துக்கு ஒரு முறை இந்த முறையை பின்பற்றினால் முகத்தில் சுருக்கம் நீங்கி முகம் பொலிவடையும். எப்போதும் நீங்கள் இளமையாக இருக்கலாம்.

இருப்பினும் இம்முறையை பின்பற்றிய பின் ஏதேனும் ஒவ்வாமை ஏற்பட்டால் உடனடியாக தவிர்த்து விட வேண்டும். அல்லது மருத்துவரை அணுக வேண்டும்.பலாப்பழ கொட்டையில் ஒளிந்துள்ள நன்மைகள்!மேலும் இந்த பலாப்பழக் கொட்டை கண் பார்வை திறனை அதிகரிக்க செய்யவும், தசைகளை வலுவாக்கவும் பயன்படுகிறது. பலாப்பழக் கொட்டையை வறுவலாகவும்,
குழம்பு போல சமைத்தும் சாப்பிடலாம். இதில் உடலுக்கு தேவையான புரதச்சத்து அதிகமாக இருக்கிறது.

MUST READ