Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்பெண்களுக்கான வீட்டு உபயோக டிப்ஸ்!

பெண்களுக்கான வீட்டு உபயோக டிப்ஸ்!

-

பெண்களே இது உங்களுக்காக தான்.

வீட்டு உபயோக டிப்ஸ்:

வீட்டில் ஈக்கள் தொல்லை இருக்கிறதா?

தரையைத் துடைக்கும் போது அதில் இரண்டு ஸ்பூன் அளவு புது சேர்ந்து தொலைத்தால் ஈக்கள் அனைத்தும் பறந்தோடும்.பெண்களுக்கான வீட்டு உபயோக டிப்ஸ்!

அடுத்தது நீங்கள் தயார் செய்யும் டீ மணமாக இருக்க வேண்டுமா?

அதாவது தேயிலையை தேவையான அளவு எடுத்துக்கொண்டு அதனை முதல் நாள் இரவில் அரை டம்ளர் தண்ணீரில் ஊற வைத்துவிட்டு அடுத்த நாள் காலையில் டீ தயார் செய்யும் சமயத்தில் பாலுடன் கலக்கினால் டீயானது மணமாகவும் ருசியாகவும் இருக்கும்.பெண்களுக்கான வீட்டு உபயோக டிப்ஸ்!

கிச்சனில் வைத்திருக்கும் கோதுமையில் பூச்சிகள் வருகிறதா?

கோதுமையினை பாத்திரத்தில் மாற்றி அதில் வெந்தயக் கீரையை போட்டு வைத்தால் எந்த பூச்சிகளும் வராது.

உங்கள் வீட்டின் தரை பளபளப்பாக இருக்க வேண்டுமா?

அதாவது உங்கள் வீட்டின் கரை மொசைக் தரையாக இருந்தால் வெதுவெதுப்பான நீரில் சாக்பீஸ் தூள் மற்றும் சலவை சோடா ஆகியவற்றை கலந்து துடைத்து பின்னர் மீண்டும் ஒருமுறை நல்ல தண்ணீரில் துடைக்க அழுக்குகள் நீங்கி தரையானது பளபளப்பாக இருக்கும்.

கைகளில் மருதாணி வைக்கும் போது ஆடையில் ஒட்டி விட்டதா?

மருதாணியினால் ஆடையில் ஏதேனும் கறைகள் ஏற்பட்டால் அதனைப் போக்க பாலை சூடாக்கி அது வெதுவெதுப்பாக இருக்கும் சமயத்தில் கறைபட்ட துணியை அந்த பாலில் அரை மணி நேரம் ஊறவைத்து பின்னர் சோப்பு போட்டு அலச கறைகள் நீங்கிவிடும்.

மாமிச உணவுகள் சீக்கிரம் வேக வேண்டுமா?

மாமிச உணவுகள் சீக்கிரம் வேக வேண்டுமென்றால் அதில் சிறிதளவு பப்பாளியை சேர்த்தால் பூப்போல் வெந்துவிடும்.பெண்களுக்கான வீட்டு உபயோக டிப்ஸ்!

கேஸ் அடுப்பினை எளிதில் சுத்தம் செய்ய வேண்டுமா?

கேஸ் அடுப்பினை எளிதில் சுத்தம் செய்ய நீங்கள் செய்ய வேண்டியது. முதலில் எலுமிச்சம் பழத்தை ஒரு டம்ளர் அளவு சூடான நீரில் கலந்து அடுப்பின் மீது தெளித்துவிட்டு பின்னர் அழுத்தி துடைத்தால் பளிச்சென மாறிவிடும்.

MUST READ