Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்குவது எப்படி?

நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்குவது எப்படி?

-

நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்குவது எப்படி?

அன்பார்ந்த உயிரினும் மேலான நண்பர்களுக்கு வணக்கம்.

மனித வாழ்க்கை என்பது சமூக வாழ்க்கையின் உறவுகளில் அடங்கியுள்ளது. தனி மனிதனின் தயாரிப்பு, கண்டுபிடிப்பு அனைத்தும் சமூக நலனுக்காகவே பயன்படுகிறது.

தனிமனிதனிடம் உற்பத்தியாகின்ற கோபம், வெறுப்பு, வன்முறை, மகிழ்ச்சி அனைத்தும் சமுதாயத்தில் பிரதிபளிக்கிறது. எனவே, சமூக வாழ்க்கை கூட்டு வாழ்க்கைதான். அந்த கூட்டு வாழ்க்கையில் பகிர்ந்து கொள்ளல், பரிமாறி மகிழ்ச்சி அடைதல் என்பது மனித இனத்தின் தனிப் பண்பு.

நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்குவது எப்படி?

உண்ணுவதாயினும், எண்ணுவதாயினும் மற்றவர்களுக்கு அளித்து, பகிர்ந்துண்டு வாழ்தலே வாழ்க்கையின் உச்சம் என்று கருதக் கூடியவன் நான். அதனால் நான் படித்த சிலவற்றை, அறிந்த சிலவற்றை உங்களோடு பரிமாறி, பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நீங்களும் படித்ததை, அறிந்ததை மற்றவர்களுக்கு பகிர்ந்து மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

எனக்கு ஒரு குறிப்பிட் மாதங்களுக்கு முன்பு குடிபழக்கம் இருந்தது. குடி என்றால் நீங்கள் நினைக்கின்ற மாதிரி மொடாக்குடியன் இல்லை. இரவில் அளவோடு தான் குடித்து வந்தேன். சில நாட்கள் உங்களைப் போன்ற சிலரின் வற்புறுத்தலால் கொஞ்சம் ஓவராகக் கூட குடிப்பதுண்டு. ஆனால் ரெகுலரா குடித்து வந்தேன். ஒரு கட்டத்தில் உடலில் இருந்து கழிவு வெளியேற்றத்தில் பிரச்சனை வந்தது. அதற்கும் சில வைத்தியங்களை அவ்வப்போது செய்துக் கொண்டு குடிப்பதை நிறுத்தவில்லை.  ஏறத்தாழ தொடர்ந்து 10,15 ஆண்டுகளுக்கு மேல் மதுவோடு வாழ்ந்து வந்தேன். திடீரென்று ஒரு நாள் வயிற்றில் பிரச்சனை ஏற்பட்டது. முதல் பிரச்சனை செரிமானக் கோளாறு, அதனைத் தொடர்ந்து சிறு நீர் கழிக்கும்போது எரிச்சல், மலம் வெளியேறுவதிலும் சில அறிகுறிகளை உணர்ந்தேன். நமது உடலில் செரிமானக் கோளாறு ஏற்பட்டால் உடனடியாக எச்சரிக்கை உணர்வு வரவேண்டும். அப்போதுதான் பல நோய் உற்பத்தியாகின்ற ஆபத்துகளில் இருந்து தப்பித்துக் கோள்ள முடியும்.

நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்குவது எப்படி?

என் உடல், எப்பொழுதும் பிரச்சனைக்குறிய உடல் இல்லை. எப்போதாவது ஒரு முறை பிரச்சனையை சந்திக்கக் கூடிய உடல். அதனால் செரினாமக் கோளாறு இருந்தாலும் அதை எப்படி அணுகுவது என்று எனக்கு தெரியவில்லை. அந்த சூழ்நிலையில் என் தோழி ஒருவர், நீங்கள் உடனடியாக உடலில் ஈரல் பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினார்.

என்ன காரணம்? ஏன் ஈரல்(Liver) பரிசோதனை செய்ய வேண்டும் என்று ஆர்வமுடன் கேட்டேன். அப்போது அவர் ஈரல் மட்டுமே பித்த நீரை உற்பத்தி செய்து செரிமானத்திற்கு உதவி செய்யக் கூடியது. செரிமானத்தில் பிரச்சனை என்றால் ஈரலில் ஏதோ பிரச்சனை இருக்கிறது என்று புரிந்துக் கொள்ள வேண்டும். அதனால் உடனடியாக ஈரல் டெஸ்ட் எடுங்கள் என்றார். ஈரல் பரிசோதனை செய்தப் பின்னர் அவர் சொன்னது உண்மை என்று அறிந்துக் கொண்டேன்.

அதனால் உடலில் செரினாமக் கோளாறு இருக்கிறது என்றால் ஈரல் பரிசோதனை செய்துக் கொள்வது அவசியம் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.  செரிமானக் கோளாறை சரிசெய்தப் பின்னர் நமது உடலில் உள்ள குடலை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.

குடலை சுத்தப்படுத்து வதற்கு பெரியதாக சிரமம் எடுத்துக் கொள்ள வேண்டாம். நமது வீட்டில் உள்ள பொருட்களே போதுமானவை. 2 டம்ளர் தண்ணீரை எடுத்து குடிக்க முடிகின்ற அளவிற்கு சூடுபடுத்தி கொள்ள வேண்டும். அதில் உங்களுக்கு ஏற்ற அளவு கல் உப்பையும், ஒரு எலுமிச்சம் பழத்தில் பாதியை பிழிந்து விடவும். நன்கு கலந்த பின்னர் அதில் ஒரு டம்பளர் நீரை முதலில் குடிக்கவும். சிறிது நேரத்தில் வயிறு கலக்கிவிடும். மேலும் வயிறு சுத்தமாக வில்லை என்றால் மீதி இருக்கும் ஒரு டம்பளர் நீரையும் குடித்தால் போதும் சிறிது நேரத்தில் வயிறு முழுவதும் காலியாகி குடல் சுத்தமாகி விடும். மேலும் கொஞ்சம் சாதாரண தண்ணீரை குடித்தால் உடலில் உள்ள கழிவுகள் முழுவதும் வெளியேறி விடும். இதுதான் வயிறை சுத்தம் செய்வதற்கு எளியமுறை. நான் இதை இரண்டு வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தி வருகிறேன். உங்களுக்கு தேவை ஏற்பட்டால் உங்கள் குடும்ப மருத்துவரை அணுகி ஆலோசனை கேட்டப் பின்னர் இந்த மருத்துவ முறையை பயன்படுத்தி கொள்ளவும்.

நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்குவது எப்படி?

நமது உடலில் குடல் நாளத்தில் இருந்துதான் நோய் எதிர்ப்பு சக்தி உற்பத்தியாகிறது . அதனால் குடலுக்கு சிரமம் கொடுக்கக் கூடிய கெமிக்கலைப் பயன்படுத்தும் உணவுப் பொருள், சர்க்கரை போன்றவற்றை தவிர்ப்பது அவசியம். நமது உடலில் ஜீரண உறுப்புகள் சரியாக இயங்காவிட்டால், உண்ணும் உணவில் உள்ள முக்கிய சத்துகளை உறிஞ்சாது. அதன் மூலமாக கிடைக்கக்கூடிய நோய் எதிர்ப்பு ஆற்றல்(சக்தி) பெருகாது. அதனால் ஜீரண உறுப்புகளை கவனமாக பாதுகாக்க வேண்டும்.

நமது உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைந்தால் அனைத்து விதமான நோய்களுக்கும் வழி வகுத்து கொடுக்கும். உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள், வைரஸ் கிரிமிகள் போன்ற எதிரிகளிடம் இருந்து உடலை பாதுகாப்பது நோய் எதிர்ப்பு ஆற்றல்தான்.

அதனால் ஜீரண உறுப்புகளுக்கு அதிக சிரமத்தை கொடுக்காத உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது. காய்கறி வகைகள், பழச்சாறு போன்ற உணவுகளை அதிகம் பயன்படுத்த வேண்டும் என்று மருத்துவர்களும் கூறுகிறார்கள். காய்கறி சூப், கீரை சூப் வகைகள் நோய் எதிர்ப்பு சக்திகளை உருவாக்கும் என்கிறார்கள். அதில் வெங்காயம், பூண்டு கலந்து தயாரக்கும் சூப் வகைகள் நல்லது. சிறிய வெங்காயத்தில் உள்ள “கொயர்சிட்டின்” ஈரல் பாதுகாப்பிற்கு அருமருந்து என்பார்கள். அதேபோல் பூண்டு உடலுக்கு நல்லது என்று ஆதிகாலத்தில் இருந்து சொல்வார்கள். அதில் உள்ள “அலிசின்” என்ற சத்து உடலுக்கு கெடுதல் செய்யும் கிரிமிகளை அழிக்கக் கூடியவை.

நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்குவது எப்படி?

வயிறு உப்புசமாகவும், சோம்பலாகவும் நமது உடல் இருக்கிறது என்றால் மருத்துவர்களின் ஆய்வுப்படி ஈரலில் ஏதோ பிரச்சனை என்று பொருள். உடனே அதன் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். எனவே, சிறிய வயது, அதிக வயது என்று பாராமல் உடல் நலனில் கூடுதல் கவனங்களை செலுத்துங்கள், உடல் ஆரோக்கியத்துடன் வாழுங்கள்.

வளமுடன் வாழ்க.. வாழ்த்துக்கள்!!!

– என்.கே.மூர்த்தி

MUST READ