கோடை காலத்தில் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க சில குறிப்புகள்:
கோடை காலத்தில் அதிக வெப்பத்தின் காரணமாக சருமம் கருமை அடைவது, முகத்தில் எண்ணெய் சுரப்பு அதிகரிப்பது போன்ற பிரச்சனைகள் ஏற்படுவது பொதுவானது. இதற்கு சரியான பராமரிப்பு அவசியம்.
முதலில் கோடை காலத்தில் முகத்தினை தினமும் இரண்டு முதல் மூன்று முறை நன்கு கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதனால் அதிகப்படியான எண்ணெய் சேராமல் இருக்கும்.
மேலும் எண்ணெய் வடியும் சருமம் உடையவர்கள் நுரை வகை ஃபேஸ் வாஷ் பயன்படுத்தலாம். உலர்ந்த சருமம் இருப்பவர்கள் மாய்ஸ்சுரைசர் பயன்படுத்தலாம்.
குறிப்பாக வெயிலில் செல்லும் முன் சன் ஸ்கிரீன் பயன்படுத்துவது மிகவும் நல்லது. மற்ற நாட்களை விட கோடை காலத்தில் சன்ஸ்கிரினை இரண்டு முதல் மூன்று தடவையாவது பயன்படுத்த வேண்டும். அதேபோல் கற்றாழை ஜெல் பயன்படுத்தலாம். இது கெமிக்கல் இல்லாத மாய்ஸ்சுரைசராக விளங்கும். இது போன்றவை சூரியனின் UV கதிர்கள் சருமத்திற்கு தீங்கு விளைவிக்காமல் பாதுகாக்க உதவும்.
அடுத்தது இரண்டு ஸ்பூன் அளவு தயிர் மற்றும் ஒரு ஸ்பூன் அளவு தேன் கலந்து முகத்தில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இது தோலை பளபளப்பாக வைத்திருக்க உதவும்.
பாசிப்பயறு மாவு, எலுமிச்சை சாறு, தயிர் ஆகிவிற்று சேர்த்து முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவி வரலாம்.
கற்றாழை ஜெல் மற்றும் கொத்தமல்லி சாறு ஆகியவற்றை கலந்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இது சருமத்தை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும்.
இது தவிர கொழுப்பு அதிகம் உள்ள உணவுப் பொருட்களை தவிர்த்தல் நல்லது. காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். இளநீர், தேங்காய் நீர், தர்பூசணி போன்ற உடலுக்கு அதிக நீர்ச்சத்துக்களை தரும் பொருட்களை சாப்பிடலாம்.
இவற்றையெல்லாம் பின்பற்றினாலும் காலை 11:00 மணி முதல் மதியம் மூன்று மணி வரை வெயிலில் அதிகம் செல்வதை தவிர்ப்பது அவசியம். வெயிலில் செல்லும் போது குடை, சன் கிளாசஸ் போன்றவற்றை பயன்படுத்தலாம். இவ்வாறு கவனித்தால் கோடைகாலத்தில் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கலாம். இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.