Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்வாழைப்பழத்தில் கேக் செய்து பார்க்கலாம் வாங்க!

வாழைப்பழத்தில் கேக் செய்து பார்க்கலாம் வாங்க!

-

தேவையான பொருட்கள் :

மைதா மாவு – 400 கிராம்
வாழைப்பழம் – 3
பால் – 100 மில்லி லிட்டர்
பேக்கிங் பவுடர் – 4 ஸ்பூன்
சர்க்கரை – 200 கிராம்
வெண்ணெய் – 200 கிராம்
செர்ரி பழம் – 60
முட்டை – 4வாழைப்பழத்தில் கேக் செய்து பார்க்கலாம் வாங்க!

செய்முறை:

1. வாழைப்பழ கேக் செய்வதற்கு முதலில் மைதா மாவு மற்றும் பேக்கிங் பவுடர் இரண்டையும் சேர்த்து கலந்து மூன்று முறை சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

2. பின் ஒரு பாத்திரத்தில் 4 முட்டைகளையும் உடைத்து ஊற்றி நுரை வரும் வரை அடித்துக் கொள்ள வேண்டும்.

3. அதன் பின் வாழைப்பழத்தை நன்றாக மசித்து எடுத்துக் கொள்ள வேண்டும். மசித்த வாழைப்பழத்துடன் பால் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

4. அதனுடன் வெண்ணெய், சர்க்கரை சேர்த்து நன்கு கரையும் வரை கலக்க வேண்டும்.

5. பிறகு சலித்து வைத்திருக்கும் மாவில் வெண்ணெய் மற்றும் சக்கரை கலந்த கலவையை சேர்த்து நன்கு நுரை வரும் வரை அடித்துக் கொள்ள வேண்டும்.

6. அடித்து வைத்த முட்டையுடன் அரைத்து வைத்த வாழைப்பழம் விழுதை சேர்த்து அதில் 50 செர்ரியை சேர்த்து கலக்க வேண்டும். அதன் பின் பேக்கிங் ட்ரே ஒன்றை எடுத்து அதில் வெண்ணை மற்றும் மாவு இரண்டையும் தடவ வேண்டும்.வாழைப்பழத்தில் கேக் செய்து பார்க்கலாம் வாங்க!

7.பின் அந்த ட்ரேயில் கேக் கலவையை ஊற்றி வேக வைக்க வேண்டும். குக்கரில் வேகவைத்தால் 45 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும். ஓவனில் வேக வைத்தால் பத்து நிமிடங்கள் போதுமானது. கேக் வெந்தவுடன் எடுத்து அதை மீதமுள்ள செர்ரி பழங்களால் அழகு படுத்திக் கொள்ளவும். சுவையான வாழைப்பழ கேக் ரெடி.

MUST READ