பட்டர் காளான் தொக்கு செய்ய தேவையான பொருட்கள்
பட்டர் காளான் – ஒரு பாக்கெட்
வெங்காயம் – 2
தக்காளி – 1
இஞ்சி – 1 துண்டு
பூண்டு – 5 பல்
சாம்பார் பவுடர் – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
சீரகத்தூள் – 1/4 ஸ்பூன்
தனியா தூள் – 1/2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தாளிக்க தேவையான பொருட்கள்:
கடலை எண்ணெய் – 1 ஸ்பூன்
கடுகு – 1/4 ஸ்பூன்
மிளகாய் வற்றல் – 1
கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை
பட்டர் காளான் செய்ய முதலில் காளானை எடுத்து நன்கு கழுவி சூடான தண்ணீரில் போட்டு வைக்க வேண்டும். பின்னர் ஐந்து நிமிடங்கள் கழித்து தண்ணீரை வடிகட்டி காளானை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதேசமயம் பூண்டு, இஞ்சி, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். இஞ்சி மற்றும் பூண்டு ஆகியவற்றை அரைத்து பேஸ்ட் போல தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
இப்போது அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து சூடான பின் பட்டர் சேர்த்து கடுகு, கறிவேப்பிலை, மிளகாய் வற்றல் ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும். அதைத் தொடர்ந்து இஞ்சி- பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும்.
அடுத்தது வெங்காயம் பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்கி தக்காளியையும் சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் மசாலா வகைகள் அனைத்தையும் சேர்த்து கலந்து விட வேண்டும்.
மசாலா ஐந்து நிமிடங்கள் வதங்கிய பின் தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி வைத்துக் கொள்ள வேண்டும். பச்சை வாசனை போனபின் கழுவி வைத்திருக்கும் காளானை பொடிப்பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு மீண்டும் ஒருமுறை மூடி போட்டு 5 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும். காளானுக்கு தேவையான உப்பையும் சேர்க்க வேண்டும்.
இப்போது அடுப்பினை அனைத்து தயாராகி இருக்கும் பட்டர் காளானை வேறொரு பாத்திரத்தில் மாற்றி சூடாக பரிமாறலாம்.
இந்த பட்டர் காளான் தொக்கு, சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி, ரொட்டி ஆகியவற்றிற்கு பொருத்தமான சைடிஷ் ஆகும்.