காலிஃப்ளவர் சூப் செய்ய தேவையான பொருட்கள்
காலிஃப்ளவர் – ஒரு கப்
காலிபிளவர் தண்டு – அரை கப்
பால் – ஒரு கப்
சோள மாவு – ஒரு ஸ்பூன்
மிளகுத்தூள் – தேவையான அளவு
வெங்காயம் – 1
பூண்டு – 6 பல்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் காலிப்ளவரை நன்கு கழுவி துருவி வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் காலிஃப்ளவர் தண்டினையும் பொடிப்பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.
இப்போது காலிஃப்ளவர் தண்டு, பூண்டு, வெங்காயம் ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அதன்பின் கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து துருவி வைத்துள்ள காலிஃப்ளவர் சேர்த்து வதக்க வேண்டும். அதேசமயம் தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிதளவு மிளகுத்தூள் சேர்த்து வதக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
அதைத்தொடர்ந்து கடாயில் எண்ணெய் சேர்த்து அரைத்து வைத்த விழுதை சேர்த்து கிளறி விட வேண்டும்.
பின்னர் சோள மாவில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரைத்து அதையும் ஊற்றி கிளற வேண்டும்.
இரண்டு நிமிடங்கள் கழித்து ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். அதன்பின் வதக்கி வைத்திருக்கும் காலிபிளவர் கலவையை சேர்த்து கொதிக்கவிட்டு, காலிபிளவர் நன்கு வெந்த பிறகு பால் சேர்த்து கிளறி அடுப்பை அணைத்து விட வேண்டும்.
பரிமாறும் சமயத்தில் மேலும் சிறிதளவு மிளகுத்தூள் சேர்த்துக் கொள்ளலாம்.
இப்போது காலிஃப்ளவர் சூப் தயார்.