Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்தினமும் காலையில இட்லி, தோசைன்னு செய்யாமல் இது ஒரு தடவை செஞ்சு பாருங்க!

தினமும் காலையில இட்லி, தோசைன்னு செய்யாமல் இது ஒரு தடவை செஞ்சு பாருங்க!

-

சிந்தாமணி அப்பம் செய்வது எப்படி?

சிந்தாமணி அப்பம் செய்ய முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசி மற்றும் பருப்பு ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் ஊற்றி ஐந்திலிருந்து ஆறு மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும். பின்னர் வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.தினமும் காலையில இட்லி, தோசைன்னு செய்யாமல் இது ஒரு தடவை செஞ்சு பாருங்க!

அரிசியும் பருப்பும் தண்ணீரில் ஊறிய பிறகு தண்ணீர் முழுவதையும் வடிகட்டி, மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிதளவு உப்பு மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அரைத்த மாவை நான்கு மணி நிறங்கள் அப்படியே விட்டு புளிக்க வைக்க வேண்டும். நான்கு மணி நேரங்களுக்கு பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்த பிறகு கடுகு, கறிவேப்பிலை, வெங்காயம் போன்றவற்றை போட்டு தாளிக்க வேண்டும். அதேசமயம் ஒரு சிட்டிகை அளவு பெருங்காயத்தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.தினமும் காலையில இட்லி, தோசைன்னு செய்யாமல் இது ஒரு தடவை செஞ்சு பாருங்க!

இப்போது வெங்காயம் நன்கு வதங்கிய பின்பு அரைத்த மாவில் சேர்த்து கலந்து விட வேண்டும். அதன் பின்னர் அடுப்பில் பணியார கல்லை வைத்து சிறிதளவு நெய் அல்லது எண்ணெய் தடவி மாவிலை ஊற்ற வேண்டும். ஒரு பக்கம் வெந்த பின்னர் மறுபக்கம் திருப்பிப்போட்டு மீண்டும் நெய் சேர்த்து வேக வைக்க வேண்டும். மாவு நன்கு இருபுறமும் எந்த பின் எடுத்து சூடாக பரிமாற வேண்டும்.

டேஸ்டான சிந்தாமணி அப்பம் தயார்.

MUST READ