Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்மக்காச்சோள கூழ் வற்றல் செய்து பார்க்கலாம் வாங்க!

மக்காச்சோள கூழ் வற்றல் செய்து பார்க்கலாம் வாங்க!

-

- Advertisement -

மக்காச்சோள கூழ் வற்றல் செய்து பார்க்கலாம் வாங்க!மக்காச்சோள கூழ் வற்றல் செய்வதற்கு தேவையான பொருட்கள்:
மக்காச்சோள மாவு -ஒரு கப்
அரிசி மாவு -அரை கப்
உப்பு- தேவையான அளவு
சீரகம்- ஒரு ஸ்பூன்
பிரண்டைச் சாறு- 2 ஸ்பூன்
பெருங்காயம் -கால் ஸ்பூன்
பச்சை மிளகாய்- 10-15

செய்முறை:
முதலில் பச்சை மிளகாயை விழுது போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின் மக்காச்சோள மாவு அரிசி, மாவு உப்பு, சீரகம், பிரண்டை சாறு, பெருங்காயம் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.

அத்துடன் மிளகாய் பொழுதையும் சேர்க்க வேண்டும்.

அதன் பின் ஒரு அடி கனமான பாத்திரத்தில் ஐந்து கப் அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.

அதில் மாவை கொட்டி கிளற வேண்டும்.

பின் மாவு வெந்து வந்த பிறகு இறக்கி ஆற விட வேண்டும்.மக்காச்சோள கூழ் வற்றல் செய்து பார்க்கலாம் வாங்க!

ஆரிய பின்பஸ்பூன் மூலம் எடுத்து துணியில் ஊற்றி காய வைக்க வேண்டும்.

வெயிலில் தொடர்ந்து மூன்று நாட்களாவது காய வைக்க வேண்டும்.

நன்கு காய்ந்த பின் தேவைப்படும் சமயங்களில் எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும்.

மக்காச்சோளத்தில் சத்துக்கள் இருப்பதால் குழந்தைகளும் இதனை சாப்பிடலாம். லெமன் சாதம், புளியோதரை போன்றவைகளுக்கு சைடிஷாக பயன்படுத்தலாம்.

MUST READ