பாதாம் அல்வா செய்ய தேவையான பொருட்கள்:
பாதாம் – 100 கிராம்
பால் – அரை கப்
சர்க்கரை – 100 கிராம்
கண்டன்ஸ்டு மில்க் – 4 ஸ்பூன்
நெய் – 100 கிராம்
குங்குமப்பூ – ஒரு சிட்டிகை
செய்முறை
பாதாம் அல்வா செய்ய முதலில் பாதாமை சூடான தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். அதன்பின் சிறிது நேரம் கழித்து பாதாமின் தோல்களை நீக்கி பாலுடன் சேர்த்து நன்கு மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பின் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் நெய் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
நெய் காய்ந்ததும் அரைத்து வைத்துள்ள பாதாம் விழுதுகளை சேர்த்து கிளற வேண்டும். அத்துடன் மேலே கொடுக்கப்பட்டுள்ள 100 கிராம் அளவு சர்க்கரையை சேர்த்து கிளறி விட வேண்டும்.
(வேண்டுமென்றால் தனியாகவும் சர்க்கரை பாகு செய்து, கலந்து கொள்ளலாம்)
சர்க்கரை நன்கு கரைந்த பின் மீதமுள்ள நெய்யை சேர்த்து கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். பாத்திரத்தில் ஒட்டாமல் நெய் பெரிது சுருண்டு வரும் வரை கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
இதற்கிடையில் குங்குமப்பூவை சிறிதளவு சூடான தண்ணீரில் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அதன்பின் அடுப்பை அணைப்பதற்கு ஐந்து நிமிடத்திற்கு முன்னால் குங்குமப்பூவினை சேர்த்து கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
ஐந்து நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து வேறு பாத்திரத்திற்கு அல்வாவை மாற்றி விட வேண்டும். இப்போது அருமையான பாதாம் அல்வா தயார்.