வாழைப்பழ அல்வா செய்ய தேவையான பொருட்கள்:
வாழைப்பழம் – 8
சர்க்கரை – ஒரு கப்
பாதாம் – 5
முந்திரி – 10
சோள மாவு – 4 ஸ்பூன்
நெய் – 6 ஸ்பூன்
செய்முறை:
வாழைப்பழ அல்வா செய்ய முதலில் வாழைப்பழத்தை தோல் குறித்து மிக்ஸியில் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். வேண்டுமென்றால் சிறிதளவு தண்ணீர் தெளித்து மையாக அரைத்துக் கொள்ளலாம்.
அதேசமயம் பாதாம் மற்றும் முந்திரிப்பருப்பை பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் நெய் சேர்த்து நெய் சூடானதும் நறுக்கி வைத்திருக்கும் பாதாம், முந்திரியை சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைக்க வேண்டும். பின்னர் அதே கடாயில் சிறிதளவு நெய் சேர்த்து மிக்ஸியில் அரைத்த வாழைப் பழங்களை சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்.
வாழைப்பழம் அடிப்பிடிக்காதவாறு கைவிடாமல் கிளறி விட வேண்டும். வாழைப்பழம் பேஸ்ட் பதத்திற்கு வந்ததும் எடுத்து வைத்திருக்கும் சர்க்கரையை சேர்த்து கிளற வேண்டும். தீயை மிதமான சூட்டில் வைத்து கைவிடாமல் கிளற வேண்டும்.
இப்போது ஒரு சிறிய கிண்ணத்தில் சோள மாவு சேர்த்து அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கரைத்து, அதனை தயாராகி வரும் அல்வாவில் சேர்க்க வேண்டும். இந்த சமயத்தில் இடை இடையில் நெய் விட்டு கிளறி விட வேண்டும்.
இப்போது அல்வா நன்கு சுருண்டு வந்ததும் வறுத்து வைத்திருக்கும் பாதாம், முந்திரி பருப்பை சேர்த்து கலந்து அடுப்பை அணைத்து விட வேண்டும்.
டேஸ்ட்டான வாழைப்பழ அல்வா தயார். நீங்களும் ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க.