Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்சுவை மிகுந்த ஜீரா ஆலூ செய்வது எப்படி?

சுவை மிகுந்த ஜீரா ஆலூ செய்வது எப்படி?

-

ஜீரா ஆலூ செய்ய தேவையான பொருட்கள்:

சுவை மிகுந்த ஜீரா ஆலூ செய்வது எப்படி?உருளைக்கிழங்கு – 400 கிராம்
சீரகம் – 2 தேக்கரண்டி
தனியா – 1/2 தேக்கரண்டி
சீரகத்தூள் – 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி
மாங்காய் தூள் – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

ஜீரா ஆலூ செய்வதற்கு முதலில் உருளைக்கிழங்கை நன்கு வேக வைத்து தோல் உரித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின் அதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

அதேசமயம் கறிவேப்பிலை, கொத்தமல்லி இலைகளையும் பொடி பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து, சூடான பின் எண்ணெய் ஊற்றி சீரகம், சீரகத்தூள், தனியா, மிளகாய் தூள், மாங்காய் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.

அதன் பின் நறுக்கிய உருளைக்கிழங்குகளை போட்டு கிளற வேண்டும்.

மசாலா அனைத்தும் உருளைக்கிழங்கில் சேரும் வரை கிளறி விட வேண்டும்.

அதன் பின் கடைசியாக கறிவேப்பிலை, கொத்தமல்லி இலைகளை தூவி அடுப்பை அணைத்து விட வேண்டும்.

இப்போது சுவை மிகுந்த ஜீரா ஆலூ ரெடி.சுவை மிகுந்த ஜீரா ஆலூ செய்வது எப்படி?

சத்துக்கள் நிறைந்த ஜீரா ஆலூவை குழந்தைகளுக்கு மதிய உணவுடன் ஷைட்டிஸாக கொடுக்கலாம். மேலும் லெமன் சாதம், புளியோதரை, தயிர் சாதம், தக்காளி சாதம் போன்றவைகளுக்கு இது ஏற்ற சைட்டிஷ் ஆகும்.

MUST READ