Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்தோசைக்கு சைடிஷாக இந்த தோசைக்காய் துவையல் போதும்!

தோசைக்கு சைடிஷாக இந்த தோசைக்காய் துவையல் போதும்!

-

தோசைக்காய் துவையல் செய்வது எப்படி?

தோசைக்காய் துவையல் செய்ய தேவையான பொருட்கள்:

தோசைக்காய் (மிகவும் பொடியாக நறுக்கியது) – ஒரு கப்
கொத்தமல்லி தழை – அரை கட்டு
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
உப்பு – தேவையான அளவுதோசைக்கு சைடிஷாக இந்த தோசைக்காய் துவையல் போதும்!

அரைக்க தேவையான பொருட்கள்:

கடுகு – சிறிதளவு
பெருங்காயம் – சிறிதளவு
வெந்தயம் – சிறிதளவு
காய்ந்த மிளகாய் – 8 முதல் 10 (காரத்திற்கு ஏற்ப)
பூண்டு – 2 பல்
புளி – நெல்லிக்காய் அளவு
கருப்பு உளுந்து – 2 ஸ்பூன்
எண்ணெய் – 1 ஸ்பூன்

செய்முறை

தோசைக்காய் துவையல் செய்ய முதலில் கொத்தமல்லி தழைகளை பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

அதேசமயம் நறுக்கி வைத்திருக்கும் தோசைக்காயில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து பிசைய வேண்டும்.

அடுத்தது ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, பெருங்காயம், வெந்தயம், காய்ந்த மிளகாய், பூண்டு, புளி, கருப்பு உளுந்து ஆகியவற்றை சேர்த்து வறுக்க வேண்டும். பின்னர் வருத்த பொருட்களை எல்லாம் ஆறவைத்து அரைக்க வேண்டும்.

அரைத்த கலவையுடன் கொத்தமல்லி தழைகளை சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து மீண்டும் அரைக்க வேண்டும்.தோசைக்கு சைடிஷாக இந்த தோசைக்காய் துவையல் போதும்!

இப்போது தோசைக்காய் துண்டுகளை சேர்த்து மீண்டும் ஒருமுறை அரைக்க வேண்டும். அனைத்தும் அரை பட்டு துவையல் பதத்திற்கு வந்தவுடன் அதை அப்படியே வேறொரு பாத்திரத்திற்கு மாற்ற வேண்டும்.

இப்போது அருமையான தோசைக்காய் துவையல் தயார். இதனை இட்லி, தோசை, சாதம் ஆகியவற்றிற்கு சைடிஷாக பயன்படுத்தலாம்.

MUST READ