Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்ஒருமுறை இந்த குளுகுளு பாதாம் சர்பத் செய்து பாருங்க!

ஒருமுறை இந்த குளுகுளு பாதாம் சர்பத் செய்து பாருங்க!

-

- Advertisement -

பாதாம் சர்பத் செய்ய தேவையான பொருட்கள்:

பால் – அரை லிட்டர்ஒருமுறை இந்த குளுகுளு பாதாம் சர்பத் செய்து பாருங்க!
ஏலக்காய் – 2
பாதாம் – 10
தேன் – 2 ஸ்பூன்
குங்குமப்பூ – ஒரு சிட்டிகை
உப்பு – ஒரு சிட்டிகை

பாதாம் சாதம் செய்யும் முறை:

பாதாம் சர்பத் செய்ய முதலில் பாதாமை இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பின்னர் ஊற வைத்த பாதாமை எடுத்து அதில் உள்ள தோலை நீக்கிவிட வேண்டும். அதன் பிறகு பாதாமை மிக்ஸியில் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.ஒருமுறை இந்த குளுகுளு பாதாம் சர்பத் செய்து பாருங்க!

அதேசமயம் அரை லிட்டர் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் ஏலக்காயை தட்டி சேர்த்து பாலை நன்றாக காய்ச்சிக் கொள்ள வேண்டும்.

இப்போது சூடாக்கிய பாலை ஆற வைக்க வேண்டும். ஆற வைத்த பாலுடன் பாதாம் விழுதை சேர்த்து கலக்கி மீண்டும் அடுப்பில் வைத்து மிதமான தீயில் சூடாக்க வேண்டும்.

பின்னர் அப்படியே இறக்கி டம்ளரில் மாற்றி தேன், குங்குமப்பூ, உப்பு ஆகியவற்றை சேர்த்து கலக்க வேண்டும்.

இப்போது சிறிது நேரம் பிரிட்ஜில் வைத்து பின்னர் பரிமாறலாம்.

தேவைப்பட்டால் பாதாம், பிஸ்தா போன்றவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அலங்கரித்துக் கொள்ளலாம்.ஒருமுறை இந்த குளுகுளு பாதாம் சர்பத் செய்து பாருங்க!

அருமையான பாதாம் சர்பத் தயார். நீங்களும் ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க. இந்த வெயிலுக்கு நல்லா குளுகுளுனு இருக்கும்.

MUST READ