குழம்பு வைக்க நேரம் இல்லையா? உடனே மதிய உணவுக்கு ரெடி பண்ண சிம்பலான இஞ்சி-பூண்டு சாதம்;
தேவையான பொருட்கள்;
இஞ்சி – 25 கிராம்
பூண்டு – 50 கிராம்
வெங்காயம் -4
கடுகு -1/4 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1/4 ஸ்பூன்
எண்ணெய் -தேவையான அளவு
பச்சரிசி -20 கிராம்
தனியா -20 கிராம்
பெருங்காயத்தூள் -சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
வடித்த சாதம் -4கப்
செய்முறை;
வாணலில் பச்சரிசி,தனியா இரண்டையும் வருத்து பொடியாக அரைத்து கொள்ள வேண்டும்.
பின்னர் வாணலில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதில் கடுகு,உளுத்தம் பருப்பு நீளவாக்கில் நறுக்கி வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.பின்னர் நறுக்கிய இஞ்சி,பூண்டு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
இதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ள வேண்டும்.பிறகு வடித்து ஆறவைத்த சாதத்தை கொட்டி கிளறவும்.இதில் அரைத்து வைத்துள்ள பொடியினை தூவி நன்றாக கிளறி விடவும்.உப்பு பார்த்து தேவைப்பட்டால் உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.மேலே கொத்தமல்லி தழை தூவி இறக்கிவிடலாம்.இப்போது சுவையான இஞ்சி பூண்டு சாதம் ரெடி.